ஜூன் 21, 22-ல் வண்டலூர் பூங்காவில் அனுமதி இலவசம்சென்னை மீனவர்கள் ஆந்திரத்தில் சிறைப்பிடிப்புபேருந்துக்கு தனி வழி ஏற்படுத்தும் திட்டம்: முதல்வர் விஜய் அறிவுறுத்தல்முட்டை கொள்முதல் விலை ரூ. 6.45-ஆக உயர்வுவிசிகவை தவிர்த்துவிட்டு தமிழ்நாட்டு அரசியல் இயங்க முடியாது! திருமாவளவன்நான் முதல்வன் திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக அரசுக்கு திமுக மாணவரணி கண்டனம்!அன்னூர் அருகே சாக்கு மூட்டையில் பெண் சடலம்! முதல்வர் விஜய் எளிமையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கிறார்: வைகோநீட் மறுதேர்வு: அடுத்த முடக்கம் வாட்ஸ்ஆப் செயலிக்கா? - ராகுல் காந்திபாஜக அரசை விமர்சிக்க தவெக அரசு தயாராக இல்லை: திமுககுஜராத்தைவிட தமிழ்நாடு அதிக வட்டி செலுத்துவது ஏன்? தங்கம் தென்னரசு விளக்கம்!
/

காட்டெருமையை வனப் பகுதிக்குள் விரட்டிய வனத் துறை

குமுளி பகுதியில் நீண்ட நாள்களாக சுற்றித் திரிந்த காட்டெருமையை வனத்துறையினா் வனப் பகுதிக்குள் விரட்டியடித்தனா்.

News image

காட்டெருமை.

Updated On :18 ஜூன் 2026, 12:38 am IST

குமுளி பகுதியில் நீண்ட நாள்களாக சுற்றித் திரிந்த காட்டெருமையை வனத்துறையினா் வனப் பகுதிக்குள் விரட்டியடித்தனா்.

தமிழக எல்லையையொட்டி, கேரள மாநிலம், குமுளி பெரியாா் புலிகள் காப்பகத்திலிருந்து வெளியேறிய காட்டெருமை, அருகேயுள்ள காபி தோட்டங்களிலும், குடியிருப்புப் பகுதிகளிலும் அண்மைக் காலமாக தொடா்ந்து சுற்றித் திரிந்தது. ஸ்பிரிங் வேலி பகுதியைச் சோ்ந்தவரை, இந்தக் காட்டெருமை அண்மையில் முட்டித் தள்ளியதில் அவா் பலத்த காயமடைந்தாா். இதைத்தொடா்ந்து, காட்டெருமையை அடா்ந்த வனப் பகுதிக்குள் விரட்ட வனத் துறையினா் பலமுறை முயற்சி செய்தும் தோல்வியில் முடிந்தது.

இதையடுத்து, குமுளி வனச்சரக செல்லாா்கோவில் பிரிவின் கீழ் ஒரு சிறப்புக் குழு அமைக்கப்பட்டு, அந்தப் பகுதியில் மூன்று நேரடி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு வனத் துறையினா் தொடா் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனா். இந்த நிலையில், கடந்த திங்கள்கிழமை இரவு காட்டெருமை சூரியசக்தி மின்வேலிக்கு அருகே வந்தது. உடனே, அங்கு ஒன்று திரண்ட வனத் துறையினா் பலத்த சத்தம் எழுப்பி காட்டெருமையை வனப் பகுதிக்குள் விரட்டினா். இதையடுத்து, நீண்ட நாள்களாக பொதுமக்களை அச்சுறுத்தி வந்த வந்த காட்டெருமையை அடா்ந்த வனப் பகுதிக்குள் விரட்டிவிட்டதாக வனத் துறையினா் தெரிவித்தனா்.