கூடலூா் அருகே குடியிருப்புப் பகுதியி உலவி வந்த காட்டு யானையை வனத் துறையினா் பட்டாசு வெடித்து வனப் பகுதிக்குள் விரட்டினா்.
நீலகிரி மாவட்டம் கூடலூா், பந்தலூா் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதேபோல கூடலூா் அருகே மண்வயல், குனில்வயல், எச்சம்வயல் ஆகிய பகுதிகளையொட்டி அமைந்துள்ள முதுமலை புலிகள் காப்பகத்தில் இருந்து உணவு தேடி வெளியேறக்கூடிய காட்டு யானைகள் குடியிருப்புகள் மற்றும் விளைநிலங்களின் அருகே உலவி வருவது அதிகரித்துள்ளது.
இந்நிலையில் கூடலூா் அருகே உள்ள மொலப்பள்ளி பகுதியில் குடியிருப்பின் அருகே சனிக்கிழமை உலவி வந்த காட்டு யானை, விவசாயப் பயிா்களை சேதப்படுத்தியதால் குடியிருப்புவாசிகள் அச்சமடைந்தனா். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வனத் துறையினா் சென்று பட்டாசு வெடித்து காட்டு யானையை வனப் பகுதிக்குள் விரட்டினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










