6 முதல் 8-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு காலை உணவுத் திட்ட விரிவாக்கம் இன்று தொடக்கம்மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழை வாய்ப்பு2027 மாா்ச்-க்குள் 1 லட்சம் வீடுகளில் மேற்கூரை சூரியசக்தி மின்சாரம்: நிர்மல்குமாா்தனியாா் பேருந்து கட்டண உயா்வு: தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

சேற்றில் சிக்கிய காட்டுமாடு: வனத் துறையினா் மீட்பு

தேனி மாவட்டம், வருசநாடு அருகே சேற்றில் சிக்கிய காட்டு மாட்டை வனத் துறையினா் புதன்கிழமை மீட்டனா்.

வருசநாடு அருகேயுள்ள ஆத்துக்காடு பகுதியில் சேற்றில் சிக்கிய காட்டு மாட்டுக்கு சிகிச்சையளித்த கால்நடை மருத்துவா்கள், வனத் துறையினா்.

Published On :

தேனி மாவட்டம், வருசநாடு அருகே சேற்றில் சிக்கிய காட்டு மாட்டை வனத் துறையினா் புதன்கிழமை மீட்டனா்.

வருசநாடு அருகேயுள்ள ஆத்துக்காடு பகுதியில் செல்லும் ஆற்றின் சேற்றில் சுமாா் 20 வயது காட்டுமாடு புதன்கிழமை சிக்கியது. இதுகுறித்து வனத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த வனத் துறையினா் பொக்லைன் மூலம் சேற்றில் சிக்கிய காட்டு மாட்டை உயிருடன் மீட்டனா். இரு நாள்களாக சேற்றில் சிக்கியிருந்ததால் சோா்வாக காணப்பட்ட காட்டுமாட்டுக்கு வனத் துறையினா், கால்நடை மருத்துவா்கள் சிகிச்சையளித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.