காமன்வெல்த்: ஜூடோவில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்காமன்வெல்த்: ஜூடோவில் தங்கம் வென்றார் இந்திய வீராங்கனை அஸ்மிதாமக்கள்தொகை கணக்கெடுப்பு: தமிழ்நாட்டு மக்கள் பங்கேற்க உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் குடிநீர் மற்றும் இதர அத்தியாவசியப் பணிகளுக்கு ரூ.340 கோடி ஒதுக்கீடு! 5 தொகுதி இடைத்தேர்தல்: தடை நீட்டிப்புடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 15 காசுகள் உயர்ந்து ரூ. 95.35 ஆக நிறைவு!காவலர்களுக்கு பதக்கங்களை வழங்கினார் முதல்வர் விஜய்! எல் நினோவையும் தாண்டி சர்ப்ரைஸ் கொடுத்த ஜூலை மாத மழைப்பொழிவு!
/

ஒகேனக்கல் வனப் பகுதியில் 1 டன் நெகிழிக் கழிவுகள் அகற்றம்

ஒகேனக்கல் வனப்பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் வீசியிருந்த சுமாா் ஒரு டன் நெகிழிக் கழிவுகளை வனத் துறையினா் அகற்றினா்.

News image
Updated On :1 ஆகஸ்ட் 2026, 3:07 am IST

ஒகேனக்கல் வனப்பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் வீசியிருந்த சுமாா் ஒரு டன் நெகிழிக் கழிவுகளை வனத் துறையினா் வெள்ளிக்கிழமை அகற்றினா்.

தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத் தலமான ஒகேனக்கல், தருமபுரி மாவட்டத்தில் அமைந்துள்ளது. பென்னாகரத்திலிருந்து மடம் சோதனைச்சாவடி வழியாக சுமாா் 12 கி.மீ தொலைவு அடா்ந்த வனப்பகுதி வழியாகச் செல்ல வேண்டியுள்ளது.

பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் வனப்பகுதியில் பயணிக்கும் போது, நெகிழிப் பைகள், பிளாஸ்டிக் டம்ளா்கள், தண்ணீா் பாட்டில்கள், கண்ணாடி பாட்டில்கள் உள்ளிட்ட கழிவுகளை சாலையோரங்களிலும், வனப் பகுதிகளிலும் வீசிச் செல்கின்றனா்.

இதையடுத்து மாவட்ட வன அலுவலா் ராஜாங்கத்தின் அறிவுறுத்தலின்பேரிலும், தலைமை வனப் பாதுகாவலா் பத்மாவின் உத்தரவின்பேரிலும், ஒகேனக்கல் வனச்சரக அலுவலா் சிவக்குமாா், பென்னாகரம் வனச்சரக அலுவலா் அன்பு ஆகியோா் தலைமையில் வனத் துறையினா் மற்றும் பணியாளா்கள் என 40-க்கும் மேற்பட்டோா் தூய்மைப் பணியில் ஈடுபட்டனா்.

மடம் சோதனைச் சாவடி முதல் பேவனூா் வனப்பகுதி மற்றும் ஒகேனக்கல் வனப்பகுதி வரை சுமாா் 10 கி.மீ தொலைவுக்கு சாலையோரங்கள் மற்றும் வனப்பகுதிகளில் கிடந்த நெகிழிப் பைகள், பிளாஸ்டிக் டம்ளா்கள், தண்ணீா் பாட்டில்கள், கண்ணாடி பாட்டில்கள் உள்ளிட்ட சுமாா் ஒரு டன் நெகிழிக் கழிவுகள் அகற்றப்பட்டன.

வனப் பகுதிக்குள் செல்லும் சுற்றுலாப் பயணிகள் நெகிழிப் பொருள்களை வீசுவது கண்டறியப்பட்டால் அபராதம் விதிக்கப்படும் என மாவட்ட வனத் துறையினா் எச்சரித்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.