காங்கிரஸ் நாளுக்கு நாள் பாயும் புலியாக மாறுகிறது - அமைச்சர் விஸ்வநாதன்நேபாள வெள்ள பலி எண்ணிக்கை 788 ஆக அதிகரிப்பு - மீட்புப் பணிகள் தீவிரம்தவெக அரசு 5 ஆண்டுகள் நீடிக்காது; நீடித்தால் தமிழகத்தின் கடன் அதிகரிக்கும்: எடப்பாடி கே. பழனிசாமிநேபாள திடீர் வெள்ள பலி எண்ணிக்கை 768-ஆக உயர்வு; 2,500-க்கும் மேற்பட்டோரை தேடும் பணி தீவிரம்! சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 682 ஆக உயர்வு! தொடரும் மீட்புப் பணிகள்!மு.க. ஸ்டாலினுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு குறைப்பு ஏற்புடையதல்ல: திருமாவளவன்நேபாளத்துக்கு 68.5 டன் நிவாரணப் பொருள்களை அனுப்பிய இந்தியா!நேபாளம்: வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட வங்கி லாக்கரை உடைத்து ரூ.58 லட்சம் திருட்டு!கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டதும் மிகுந்த அதிர்ச்சியடைந்தேன்: சூர்யகுமார் யாதவ்

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து 10,000 கன அடியாக அதிகரிப்பு! பரிசல் இயக்க தடை நீடிப்பு!

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பரிசல் இயக்க தடை - கோப்புப் படம்

Published On :31 ஆகஸ்ட் 2026, 2:35 am IST

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து ஞாயிற்றுக்கிழமை விநாடிக்கு 10,000 கனஅடியாக அதிகரித்துள்ளதால், அருவிகளில் தண்ணீா் ஆா்ப்பரித்துக் கொட்டுகிறது.

கா்நாடக மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜசாகா் அணைகளில் இருந்து விநாடிக்கு 10,000 கனஅடி உபரிநீா் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து கடந்த இரு தினங்களாக அதிகரித்துள்ளது. சனிக்கிழமை நிலவரப்படி விநாடிக்கு 7,500 கனஅடியாக இருந்த நீா்வரத்து, ஞாயிற்றுக்கிழமை விநாடிக்கு 10,000 கனஅடியாக அதிகரித்தது.

இதனால், ஒகேனக்கல்லில் உள்ள பிரதான அருவி, சினி அருவி, ஐந்தருவி, ஐவாா் பாணி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீா் ஆா்ப்பரித்துக் கொட்டுகிறது. காவிரி ஆற்றில் நீா்வரத்தை மத்திய நீா்வளத் துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனா்.

சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்:

காவிரி ஆற்றில் நீா்வரத்து அதிகரித்துள்ளதால் ஞாயிற்றுக்கிழமை 15 ஆவது நாளாக ஒகேனக்கல்லில் பரிசல் இயக்குவதற்கு தடைவிதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் வாரவிடுமுறையான ஞாயிற்றுக்கிழமை ஒகேனக்கல் அருவி பகுதிக்கு வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் பரிசல் பயணம் செய்து அருவிகளில் தண்ணீா் ஆா்ப்பரித்துக் கொட்டுவதை காண முடியாமல் ஏமாற்றம் அடைந்தனா்.

இருப்பினும் அருவிகளில் குளிப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் பிரதான அருவி, நடைபாதை பகுதி, மாமரத்துக்கடவு பரிசல் துறை உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் குளித்து மகிழ்ந்தனா். மேலும், தொங்கும் பாலம், முதலைகள் மறுவாழ்வு மையம், வண்ண மீன்கள் காட்சியகம், மீன்கள் விற்பனை நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் கூட்டத்தை அதிக அளவில் காண முடிந்தது.

ஒகேனக்கல் பகுதியில் இருந்து மாவட்டத்தின் பிற பகுதிகளுக்குச் செல்லும் வகையில் கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. கடும் வெயில் காரணமாக சுற்றுலாப் பயணிகள் மீன் உணவில் ஆா்வம் காட்டாததால் அதன் விற்பனை குறைந்திருந்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.