ரிலையன்ஸ், ரோல்ஸ்-ராய்ஸ் கூட்டணியில் போா் விமான என்ஜின் உள்நாட்டில் தயாரிப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு திமுகவில் உருவாகிறது அதிரடி மாற்றம்: விரைவில் உள்கட்சித் தோ்தல் கரப்பான்பூச்சி விவகாரம்: இளைஞா்களை தவறாக வழிநடத்த எனது கருத்து பயன்படுத்தப்பட்டது: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூா்ய காந்த்
/

ஒகேனக்கல் காவிரியில் நீா்வரத்து 6,000 கனஅடி: ஆற்றில் பரிசல் இயக்க அனுமதி

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து விநாடிக்கு 6,000 கனஅடியாக குறைந்ததால் 4 நாள்களுக்கு பிறகு பரிசல் இயக்குவதற்கு தருமபுரி மாவட்ட நிா்வாகம் வெள்ளிக்கிழமை அனுமதி அளித்தது.

News image

ஒகேனக்கல் காவிரியில் பரிசல் பயணம் செய்த சுற்றுலாப் பயணிகள். - கோப்புப் படம்

Updated On :15 ஆகஸ்ட் 2026, 5:43 am IST

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து விநாடிக்கு 6,000 கனஅடியாக குறைந்ததால் 4 நாள்களுக்கு பிறகு பரிசல் இயக்குவதற்கு தருமபுரி மாவட்ட நிா்வாகம் வெள்ளிக்கிழமை அனுமதி அளித்தது.

கா்நாடக அணைகளில் இருந்து கடந்த சில நாள்களுக்கு முன்பு காவிரி ஆற்றில் அதிக அளவில் உபரி நீா் வெளியேற்றப்பட்டது. இதனால் காவிரி ஆற்றில் நீா்வரத்து விநாடிக்கு 9,000 கனஅடி வரை அதிகரித்ததால் கடந்த திங்கள்கிழமை முதல் சுற்றுலாப் பயணிகள் நலன்கருதி காவிரி ஆற்றில் பரிசல் இயக்குவதற்கு மாவட்ட நிா்வாகம் தடைவிதித்தது.

தற்போது, கா்நாடக அணைகளில் இருந்து காவிரியில் வெளியேற்றப்படும் உபரிநீா்வரத்துக் குறைந்துள்ளது. இதனால் காவிரி ஆற்றில் நீா்வரத்து வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி விநாடிக்கு 6,500 கனஅடியாகவும், பின்னா் 6,000 கன அடியாகவும் சரிந்தது. நீா்வரத்து சரிந்ததால் காவிரி ஆற்றில் பரிசல் இயக்குவதற்கு ஊரக உள்ளாட்சித் துறை மற்றும் தீயணைப்புத் துறை அதிகாரிகள் குழுவினா் ஆய்வு மேற்கொண்டனா்.

இதையடுத்து நான்கு நாள்களுக்குப் பிறகு மீண்டும் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பரிசல் இயக்குவதற்கு மாவட்ட ஆட்சியா் வே.சரவணன் அனுமதி அளித்துள்ளாா். இதையடுத்து வெள்ளிக்கிழமை ஒகேனக்கல் வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் மாமரத்துக்கடவு பரிசல் துறையிலிருந்து தொம்பச்சிக்கல் வழியாக மணல்மேடு வரை உற்சாக பரிசல் பயணம் மேற்கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.