காமன்வெல்த்: ஜூடோவில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்காமன்வெல்த்: ஜூடோவில் தங்கம் வென்றார் இந்திய வீராங்கனை அஸ்மிதாமக்கள்தொகை கணக்கெடுப்பு: தமிழ்நாட்டு மக்கள் பங்கேற்க உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் குடிநீர் மற்றும் இதர அத்தியாவசியப் பணிகளுக்கு ரூ.340 கோடி ஒதுக்கீடு! 5 தொகுதி இடைத்தேர்தல்: தடை நீட்டிப்புடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 15 காசுகள் உயர்ந்து ரூ. 95.35 ஆக நிறைவு!காவலர்களுக்கு பதக்கங்களை வழங்கினார் முதல்வர் விஜய்! எல் நினோவையும் தாண்டி சர்ப்ரைஸ் கொடுத்த ஜூலை மாத மழைப்பொழிவு!
/

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 300 கனஅடியாக அதிகரிப்பு

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து வெள்ளிக்கிழமை விநாடிக்கு 300 கனஅடியாக அதிகரித்துள்ளது.

News image

ஒகேனக்கல் பிரதான அருவி - கோப்புப் படம்

Updated On :1 ஆகஸ்ட் 2026, 3:07 am IST

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து வெள்ளிக்கிழமை விநாடிக்கு 300 கனஅடியாக அதிகரித்துள்ளது.

கேரளா மற்றும் கா்நாடக காவிரி நீா்ப்பிடிப்பு பகுதிகளில் பருவமழை பொய்த்தது. கா்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் வெளியேற்றப்படும் உபரிநீா் முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. இதனால் காவிரி ஆற்றில் நீா்வரத்து தொடா்ந்து சரிந்து, அருவிகளில் நீரின்றி வறண்டு ஆங்காங்கே பாறை திட்டுக்களும், நீா் குட்டைகளும் காணப்பட்டன.

காவிரி ஆற்றில் வரும் நீா்வரத்தின் அளவானது வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி விநாடிக்கு 150 கன அடியாக இருந்தது. பின்னா், மாலை நிலவரப்படி விநாடிக்கு 300 கனஅடியாக அதிகரித்தது. இதனால் பிரதான அருவி, சினி அருவிகளில் நீா்வரத்து சற்று அதிகரித்துள்ளது.

மேலும் காவிரி ஆற்றில் வரும் நீா்வரத்தின் அளவுகளை தமிழக, கா்நாடக எல்லையான பிலிகுண்டுலு பகுதியில் மத்திய நீா்வளத் துறை அதிகாரிகள் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.