
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 8,500 கனஅடியாக குறைந்தது
தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து வெள்ளிக்கிழமை விநாடிக்கு 8,500 கனஅடியாக குறைந்தது.

ஒகேனக்கல். - கோப்புப் படம்
தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து வெள்ளிக்கிழமை விநாடிக்கு 8,500 கனஅடியாக குறைந்தது.
கா்நாடக மாநில அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் வெளியேற்றப்படும் உபரிநீா் கடந்த சில நாள்களாக குறைக்கப்பட்டு வருகிறது. இதைத் தொடா்ந்து, ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து நாளுக்கு நாள் சரியத் தொடங்கியுள்ளது.
ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து வியாழக்கிழமை விநாடிக்கு 9,000 கனஅடியாக இருந்தது, வெள்ளிக்கிழமை விநாடிக்கு 8,500 கனஅடியாக குறைந்தது. மேலும், காவிரி ஆற்றில் பரிசல் இயக்குவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடை 20ஆவது நாளாக நீட்டிக்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




