
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 7,500 கன அடியாக அதிகரிப்பு!
ஒகேனக்கல் நீர்வரத்து விநாடிக்கு 7,500 கன அடியாக உயர்ந்துள்ளது பற்றி..

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து
கர்நாடக அணைகளிலிருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வரும் நீர்வரத்து அளவானது விநாடிக்கு 7,500 கன அடியாக அதிகரித்துள்ளது.
கேரளம் மற்றும் கர்நாடக மாநிலங்களின் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வந்த பருவமழையின் தாக்கம் சற்று குறைந்தது.இதனால் கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ண ராஜ சாகர் அணைகளுக்கு வரும் உபரி நீரின் வரத்து குறையத் தொடங்கியதால் காவிரி ஆற்றில் வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டது.
கடந்த சில நாள்களாக காவிரி ஆற்றில் நீர்வரத்து சரியத் தொடங்கியது. ஒகேனக்கலுக்கு வரும் நீர்வரத்தின் அளவானது வெள்ளிக்கிழமை நிலவரப்படி விநாடிக்கு 6,500 கன அடியாக இருந்தது. தமிழகத்திற்கு உரிய நீர் வழங்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்ததை அடுத்து தமிழகத்திற்கு விநாடிக்கு 3,500 கன அடி உபரிநீர் நாள்தோறும் திறக்க வேண்டும் என கர்நாடக அரசிற்கு உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில் கர்நாடக அணைகளிலிருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் ஒகேனக்கல்லுக்கு வரும் நீர்வரத்து அளவானது சனிக்கிழமை நிலவரப்படி விநாடிக்கு 7,500 கன அடியாக அதிகரித்து தமிழக கர்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக வந்து கொண்டிருக்கிறது.
நீர்வரத்து அதிகரிப்பால் ஒகேனக்கல் உள்ள ஐந்தருவி ஐவார் பாணி பிரதான அருவி சினி அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. மேலும் கர்நாடக அணைகளிலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் வரத்தை பொருத்தவாறு காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பதும் குறைவதும் ஆக உள்ளதால் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் நீர்வரத்தின் அளவுகளைத் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




