FOLLOW US

ON GOOGLE DISCOVER

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நிறைவு! இரு அவைகளிலும் 11 மசோதாக்கள் நிறைவேற்றம்!எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்கியது!சென்னையில் தவெக அரசின் முதல் முதலீட்டாளர்கள் மாநாடு தொடங்கியது!தமிழக மீனவர்கள் 9 பேரை கைது செய்த இலங்கை கடற்படைதில்லி செங்கோட்டை குண்டுவெடிப்புக்கு அல்-கொய்தாவே காரணம்: ஐ.நா.நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு!சென்னை பக்கிங்காம் கால்வாயில் வாட்டர் மெட்ரோ: டெண்டர் வெளியீடு
/

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 6,500 கன அடியாக சரிவு!

கர்நாடக அணைகளிலிருந்து உபரி நீரின் வரத்து குறைக்கப்பட்டுள்ளதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து விநாடிக்கு 6,500 கன அடியாக சரிந்துள்ளது.

News image

ஒகேனக்கல்.

Updated On :13 ஆகஸ்ட் 2026, 12:01 pm IST

கர்நாடக அணைகளிலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் வரத்து குறைக்கப்பட்டுள்ளதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து விநாடிக்கு 6,500 கன அடியாக சரிந்துள்ளது.

கேரளத்தின் வயநாடு மற்றும் அதனைச் சுற்றியுள்ள காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக பருவமழையின் தாக்கம் அதிகரித்து இருந்தது. இதனால், கர்நாடகத்தின் கபினி அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரித்ததால் காவிரி ஆற்றில் உபரி நீர் வெளியேற்றப்பட்டது.

கடந்த சில நாட்களாக ஒகேனக்கல்லுக்கு வரும் நீர்வரத்து விநாடிக்கு 9,000 கன அடியாக நீடித்து வந்தது. அண்மையில் நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் மற்றும் காவிரி ஒழுங்காற்றுக் குழு கூட்டம் ஆகியவற்றில் தமிழ்நாட்டுக்கு நாள்தோறும் ஒரு டிஎம்சி தண்ணீர் வீதம் ஆக. 12 ஆம் தேதி முதல் 15 நாள்களுக்கு 15 டிஎம்சி தண்ணீர் திறக்கப்பட வேண்டும் என்றும், இதனை தமிழக, கர்நாடக எல்லையில் பிலிகுண்டுலு பகுதியில் நீர்வளத்துறை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், காவிரி ஆற்றில் நீர்வரத்து மேலும் அதிகரிக்க கூடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஒகேனக்கல்லுக்கு வரும் நீர்வரத்து புதன்கிழமை நிலவரப்படி விநாடிக்கு 9,000 கன அடியாக இருந்த நீர்வரத்து, வியாழக்கிழமை காலை நிலவரப்படி விநாடிக்கு 6500 கன அடியாக சரிந்தது.

நீர்வரத்து சரிந்ததால் ஒகேனக்கல்லில் உள்ள அருவிகளில் விழும் நீரின் அளவு குறைந்தது. நீர்வரத்து குறைந்த போதிலும் காவிரி ஆற்றில் பரிசல்கள் இயக்குவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை தொடர்ந்து 4ஆவது நாள்களாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

Summary

As the discharge of surplus water from Karnataka dams has been reduced, the water inflow to Hogenakkal has dropped to 6,500 cubic feet per second.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.