எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது நடவடிக்கையில் சந்தேகம்: எடப்பாடி பழனிசாமிஉதயநிதியை அவசரமாக கைது செய்தது ஏன்? அன்புமணி கண்டனம்!உதயநிதி கைது! தமிழ்நாடு முழுவதும் திமுக போராட்டம்!உதயநிதி கைது: தேனியில் சாலை மறியலில் ஈடுபட்ட ஓபிஎஸ் கைது!எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது! தஞ்சை அழைத்துச் செல்லப்படுகிறார்எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது!உதயநிதியை அழைத்துச் செல்லும் வாகனத்தை மறித்து திமுகவினர் போராட்டம்!உதயநிதி விவகாரம்: சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு!
/

காவிரியில் 18,000 கன அடி நீர்வரத்து! ஒகேனக்கலில் பரிசல்கள் இயக்க தடை

காவிரியில் 18,000 கன அடி நீர் வந்து கொண்டிருப்பதால் ஒகேனக்கலில் பரிசல்கள் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது பற்றி..

News image

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பரிசல் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால்,கரையோர பகுதியில் பரிசல்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

Updated On :4 ஆகஸ்ட் 2026, 1:49 pm IST

பென்னாகரம் : கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் திறக்கப்பட்ட தண்ணீர் விநாடிக்கு 18000 கன அடியாக அதிகரித்துள்ளதால், ஒகேனக்கல்லில் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் தற்காலிக தடை விதித்துள்ளது.

கர்நாடக மாநிலம் கபினி அணையில் இருந்து திறக்கப்பட்ட உபரி நீரானது செவ்வாய்க்கிழமை காலை தமிழக எல்லையான பிலிகுண்டுலுவை வந்தடைந்தது.

இதனை அடுத்து காவிரி ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. காவிரி ஆற்றில் வரும் நீர்வரத்தின் அளவானது திங்கள்கிழமை நிலவரப்படி விநாடிக்கு 300 கன அடியாக இருந்த நீர்வரத்து, கர்நாடக அணைகளின் நீர் திறப்பால் செவ்வாய்க்கிழமை காலை 7 மணி நிலவரப்படி விநாடிக்கு 10,000 கன அடியாக உயர்ந்தது.

மதிய நிலவரப்படி விநாடிக்கு 18,000 கன அடி என நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து தமிழக - கர்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு வந்து கொண்டிருக்கிறது.

காவிரி ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால், ஒகேனக்கல் வரும் சுற்றுலா பயணிகளின் நலன் கருதி ஆற்றில் பரிசல்கள் இயக்க தருமபுரி மாவட்ட ஆட்சியர் வே.சரவணன் தற்காலிக தடை விதித்துள்ளது.

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பால் ஐந்தருவி, ஐவார் பாணி, சினி அருவி, பிரதான அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

காவிரி ஆற்றில் பரிசல்கள் இயக்க தடை விதித்துள்ளதால், ஒகேனக்கல் மாமரத்துக்கடவு பரிசல் துறை ஊரக உள்ளாட்சித் துறை அதிகாரிகளால் பூட்டப்பட்டுள்ளது. இருப்பினும் அருவிகளில் குளிப்பதற்கு தடை விதிக்காததால் காவிரி ஆற்றின் கரையோர பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் குளித்து மகிழ்ந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.