கர்நாடக அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் கடந்த மூன்று நாட்களுக்குப் பிறகு செவ்வாய்க்கிழமை அதிகாலை தமிழக எல்லையான பிலிகுண்டுலுவை வந்தடைந்தது.
மேலும் ஒகேனக்கல்லில் உள்ள அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது.
கடந்த சில நாட்களாக காவிரி ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து சரிந்து வரண்டு காணப்பட்டது. ஆண்டுதோறும் ஜூன் மாதம் பெய்யத் தொடங்கும் தென்மேற்கு பருவமழையானது வழக்கத்தை விட முன்பே கேரளா மாநிலத்தில் தொடங்கியது.
இருப்பினும் கர்நாடக மாநிலத்தில் அதன் தாக்கம் சற்று தாமதமானது. இதனால் காவிரி ஆற்றில் கர்நாடக அணையில் இருந்து தண்ணீர் திறக்காமல், முற்றிலுமாக உபரி நீர் வரத்து நிறுத்தப்பட்டது.
ஒகேனக்கல் காவிரி ஆறு முற்றிலுமாக வறண்டு, ஐந்தருவி ஐவார் பாணி உள்ளிட்ட அருவிகள் தண்ணீர் இன்றி வரண்டும், பிரதான அருவி, சினி அருவிகளில் சொற்ப அளவிலான தண்ணீர் வரத்து இருந்தது. இந்த நிலையில் கேரள மற்றும் கர்நாடக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பருவமழையின் தாக்கம் மீண்டும் அதிகரித்துள்ளது.
கர்நாடகாவில் உள்ள கபினி அணை வேகமாக நிரம்பி வருவதால், அணையின் பாதுகாப்பு கருதி கடந்த கடந்த 1 ஆம் தேதி விநாடிக்கு 15,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது.
பின்னர் நீர்வரத்து செய்ததால் அணையிலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் வரத்து குறைக்கப்பட்டு,பின்னர் மீண்டும் விநாடிக்கு 25,000 கன அடி வரை தண்ணீர் வெளியேற்றப்பட்டது.
இந்த உபரி நீரானது கடந்த மூன்று நாட்களுக்குப் பிறகு செவ்வாய்க்கிழமை அதிகாலை தமிழக, கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவை வந்தடைந்தது. பின்னர் அங்கிருந்து சுமார் 2 மணி நேரத்தில் ஒகேனக்கல் பகுதியை வந்து,பிரதான அருவி,சினி அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
ஒகேனக்கல்லுக்கு வரும் நீர்வரத்தின் அளவானது திங்கள்கிழமை நிலவரப்படி விநாடிக்கு 300 கன அடியாக நீர் வரத்தை இருந்தது.
கர்நாடக அணைகளில் நீர் திறப்பு காவிரி ஆற்றில் நீர்வரத்து உயர்ந்து செவ்வாய்க்கிழமை காலை 7 மணி நிலவரப்படி விநாடிக்கு 1,000 கன அடியாகவும், 8 மணி நிலவரப்படி 8,000 கன அடியாக தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. நீர் வரத்து அதிகரிப்பால் காவிரி ஆற்றில் உள்ள பாறை மூழ்க தொடங்கியுள்ளது.
Summary
Water released from Karnataka dams into the Cauvery River has reached Tamil Nadu!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

எம்.ஜி.ஆருக்குப் பின்... காவிரிக்காக பெங்களூரு செல்லும் விஜய்!

முதல்வர் விஜய்யை வரவேற்க தடல்புடலாக தயாராகும் கர்நாடக விதான சௌதா!

காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு உத்தரவிட்டபோதிலும் எங்களிடம் தண்ணீர் இல்லை: கர்நாடக அமைச்சர்

27.7.1976: தண்ணீர் விடக்கோரி கர்நாடகத்துக்கு த.நா. அரசு கடிதம்
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |




