
ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 7,000 கனஅடி
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து செவ்வாய்க்கிழமை விநாடிக்கு 7,000 கனஅடியாக உள்ளது.

ஒகேனக்கல். - கோப்புப் படம்
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து செவ்வாய்க்கிழமை விநாடிக்கு 7,000 கனஅடியாக உள்ளது.
கா்நாடக மாநில அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் உபரிநீா் வெளியேற்றப்படுவதன் காரணமாக, காவிரி ஆற்றில் நீா்வரத்து 7,000 கனஅடியாக உள்ளது. காவிரி ஆற்றில் நீா்வரத்து அதிகமாக உள்ளதால், ஒகேனக்கல்லில் பரிசல் இயக்க மாவட்ட நிா்வாகம் விதித்த தடை 4-ஆவது நாளாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஒகேனக்கல்லுக்கு வரும் நீா்வரத்தின் அளவை தமிழக, கா்நாடக எல்லையான பிலிகுண்டுலு பகுதியில் மத்திய நீா்வளத் துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



