புது தில்லி பிரகடனம் 2026: பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ஒருமனதாக ஏற்பு!மின் தேவையை சமாளிக்க கூடுதல் மின்சாரம் கொள்முதல்: தமிழக அரசு அறிவிப்பு!புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!மதுரையில் அரசு மரியாதையுடன் சாலமன் பாப்பையா உடல் தகனம்!பிரிக்ஸ் மாநாடு: உக்ரைனில் ஐரோப்பிய படைகள், ரஷியா உடன் போருக்கு வழி! - புதின் எச்சரிக்கை!இந்திய தேர்தல் நடைமுறை உலகின் வெளிப்படையான நடைமுறைகளில் ஒன்று: தலைமைத் தேர்தல் ஆணையர்பிரிக்ஸ் உச்சி மாநாடு! சீன அதிபருடன் வரும் உணவு ருசி தேர்வாளர் குழு! ஆச்சரிய தகவல்தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 7,000 கனஅடியாக அதிகரிப்பு: பரிசல் இயக்க மீண்டும் தடை

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து சனிக்கிழமை விநாடிக்கு 7,000 கனஅடியாக அதிகரித்ததால், காவிரி ஆற்றில் பரிசல் இயக்குவதற்கு தற்காலிகத் தடைவிதிப்பதாக மாவட்ட ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

Ban on operating coracles in the Cauvery River at Hogenakkal..

நீர்வரத்து அதிகரிப்பால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பரிசல் இயக்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் நடைபாதையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பரிசல்கள். - கோப்புப்படம்

Published On :

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து சனிக்கிழமை விநாடிக்கு 7,000 கனஅடியாக அதிகரித்ததால், காவிரி ஆற்றில் பரிசல் இயக்குவதற்கு தற்காலிகத் தடைவிதிப்பதாக மாவட்ட ஆட்சியா் வே. சரவணன் தெரிவித்துள்ளாா்.

கா்நாடக மாநில அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் உபரிநீா் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து திடீரென அதிகரித்துள்ளது. வெள்ளிக்கிழமை நிலவரப்படி விநாடிக்கு 2,000 கன அடியாக இருந்த நீா்வரத்து, சனிக்கிழமை காலை விநாடிக்கு 4,000 கனஅடியாகவும், மாலையில் விநாடிக்கு 7,000 கனஅடியாகவும் அதிகரித்து தமிழக- கா்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கலுக்கு வந்து கொண்டிருக்கிறது.

இதனால் சுற்றுலாப் பயணிகளின் நலன்கருதி ஒகேனக்கல்லில் பரிசல் இயக்குவதற்கு சனிக்கிழமை முதல் தற்காலிகத் தடைவிதிப்பதாக மாவட்ட ஆட்சியா் வே.சரவணன் தெரிவித்துள்ளாா். இந்த தடை உத்தரவு காரணமாக ஒகேனக்கல் மாமரத்துக்கடவு பரிசல் துறை பூட்டப்பட்டது. நீா்வரத்து அதிகரித்ததால் ஒகேனக்கல் அருவிகள் மீண்டும் ஆா்ப்பரிக்கத் தொடங்கியுள்ளன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.