தமிழகம் முழுவதும் நாளை குடற்புழு தொற்று தடுப்பு மாத்திரை வழங்கும் சிறப்பு முகாம்சுதந்திர தின பாதுகாப்பு! பல இடங்களில் பயங்கரவாத எதிா்ப்பு ஒத்திகையில் ஈடுபட்ட என்எஸ்ஜி!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு புதுச்சேரியில் அரசு விழாவில் அமித் ஷா இன்று பங்கேற்பு! மதுக் கடைகளை மூட உத்தரவு!கடந்த 6 மாதங்களில் 3,323 இந்தியா்களை நாடு கடத்திய கனடா!சென்னை உயா்நீதிமன்ற புதிய நீதிபதிகள் இன்று பதவியேற்பு
/

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பரிசல்கள் இயக்க அனுமதி!

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பரிசல்கள் இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது தொடர்பாக...

News image

காவிரி ஆற்றில் பரிசல் பயணத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால், ஒகேனக்கல் பெரியபாணி பகுதியில் உற்சாக பரிசல் பயணம் மேற்கொள்ளும் சுற்றுலா பயணிகள். - படம்: தினமணி

Updated On :9 ஆகஸ்ட் 2026, 10:14 am IST

பென்னாகரம்: காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்து வருவதால் ஒகேனக்கல்லில் ஐந்து நாள்களுக்குப் பிறகு பரிசல்கள் இயக்குவதற்கு மாவட்ட நிர்வாகம் ஞாயிற்றுக்கிழமை(ஆக. 9) முதல் அனுமதி அளித்துள்ளது.

கர்நாடக மாநிலங்களில் இருந்து காவிரி ஆற்றில் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வந்ததால், ஒகேனக்கல்லுக்கு அதிகபட்சமாக விநாடிக்கு 22,000 கன அடியாக நீர்வரத்து அதிகரித்து இருந்தது.

பின்னர், நாளடைவில் கபினி அணையில் இருந்து காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்ட உபரிநீர் குறைக்கப்பட்டது. ஒகேனக்கல்லுக்கு வரும் நீர்வரத்து நாளுக்கு நாள் தொடர்ந்து குறைந்து, ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி விநாடிக்கு 5,000 கன அடியாக குறைந்தது.

தொடர்ந்து, நீர்வரத்து குறைவினால், அருவிகளில் விழும் நீரின் அளவு குறையத் தொடங்கியது. இந்த நிலையில் ஒகேனக்கல்லுக்கு அதிக நீர் வரத்து காரணமாக சுற்றுலாப் பயணிகளின் நலன் கருதி கடந்த 5 நாள்களாக காவிரி ஆற்றில் பரிசல்களுக்கு தற்காலிகத் தடை விதிக்கப்பட்ட நிலையில், தற்போது நீர்வரத்து குறைந்துள்ளதால் பரிசல்கள் இயக்குவதற்கு தருமபுரி மாவட்ட ஆட்சியர் வே.சரவணன் அனுமதி அளித்துள்ளார்.

வார விடுமுறையான ஞாயிற்றுக்கிழமையில் ஒகேனக்கல் வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் மாமரத்து கடவு பரிசில் துறையிலிருந்து தொம்பச்சிக்கல் வழியாக மணல்மேடு வரை பரிசல் பயணம் செய்து ஐந்தருவி, பெரியபாணி உள்ளிட்ட அருவிகளை கண்டு ரசித்து மகிழ்ந்தனர்.

நீர்வரத்து குறைந்த போதிலும் ஒகேனக்கல்லில் உள்ள அருவிகளில் தண்ணீர் சீராக ஆர்ப்பரித்துக் கொட்டி வருகிறது.

கர்நாடக மாநில அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் வெளியேற்றப்படும் அளவு குறைக்கப்பட்டுள்ளதால், ஒகேனக்கல்லுக்கு வரும் நீர் மேலும் குறையும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், தமிழக, கர்நாடக எல்லையான பிலிகுண்டுலு பகுதியில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து நீர்வரத்தின் அளவுகளை, தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

Summary

As the water inflow in the Cauvery River has decreased, the district administration has granted permission to operate coracles at Hogenakkal starting Sunday, following a five-day suspension.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.