ராணுவ முற்றுகையை நீக்கினால் ஹோர்முஸை திறக்க தயார்! அமெரிக்காவுக்கு ஈரான் நிபந்தனை!கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல்நிலை சீராக உள்ளது: மருத்துவமனை அறிக்கை மீனவர்களின் போராட்ட அறிவிப்பால் பதற்றம்: அன்புமணி கேள்வி!புதிய தலைமைச் செயலகத்துக்கு எதிர்ப்பு! செப்.29-இல் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்!தேசிய விருதைப் பெற்றார் ஜி.வி. பிரகாஷ் குமார்! தமிழ்நாட்டில் 40 நகராட்சி நிர்வாகத் துறை அலுவலகங்களில் சோதனை!ஆசிய விளையாட்டு: மகளிர் கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு தங்கம்!தொடர் சரிவில் தங்கம் விலை! இன்றைய நிலவரம்

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பரிசல்கள் இயக்க 2-வது நாளாக தடை

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கவும், பரிசல்கள் இயக்கவும் இரண்டாவது நாளாகத் தடை ....

Hogenakkal Cauvery

காவிரி ஆற்றில் பரிசல்கள் இயக்க மாவட்ட நிர்வாகம் 2-வது நாளாக தடை - கோப்புப்படம்

Published On :

கபின் அணையில் நீர் திறப்பால் உயர்ந்து வரும் நீர்வரத்தால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கவும், பரிசல்கள் இயக்கவும் இரண்டாவது நாளாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் செவ்வாய்க்கிழமை காலை முதல் நீா்வரத்து தொடா்ந்து அதிகரித்து வருகிறது. ஆடிப்பெருக்கு விழா மற்றும் கா்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீா் திறக்கப்பட்டதை அறிந்த சுற்றுலாப் பயணிகள், ஒகேனக்கல்லில் உள்ள அருவிகளை காண்பதற்காக அதிக அளவில் வந்துள்ளனா்.

அதிக நீா் வரத்தின் காரணமாக காவிரி ஆற்றில் பரிசல்கள் இயக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதால், சுற்றுலாப் பயணிகளின் நலன் கருதி ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பரிசல்கள் இயக்குவதற்கு தருமபுரி மாவட்ட ஆட்சியா் வே.சரவணன் தற்காலிக தடை விதித்துள்ளாா். இதனால் ஒகேனக்கல் வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் பரிசல் பயணம் செய்ய முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனா்.

இருப்பினும் அருவிகளில் குளிப்பதற்கு தொடா்ந்து அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால், வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் எண்ணெய் தேய்த்து பிரதான அருவி, மாமரத்துக்கடவு மற்றும் காவிரி ஆற்றின் கரையோரப் பகுதிகளில் குளித்தனா்.

இந்த நிலையில், உபரி நீர் வரத்து காரணமாக செவ்வாய் இரவு மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 4,923 கனஅடியாக அதிகரித்த நிலையில், புதன்கிழமை காலை வினாடிக்கு 20,000 கன அடியாக அதிகரித்துள்ளது. இதனைத்தொடர்ந்து புதன்கிழமை காலை மேட்டூர் அணையின் நீர் மட்டும் 74.01அடியாக உயர்ந்துள்ளது.

இந்த நிலையில், கபினி அணையில் நீர் திறப்பால் உயர்ந்து வரும் நீர்வரத்தால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கவும், பரிசல்கள் இயக்கவும் இரண்டாவது நாளாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கா்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் கூடுதலாக உபரி நீா் வெளியேற்றப்பட வாய்ப்புள்ளதால் கரையோரப் பகுதிகள்,தடை செய்யப்பட்ட இடங்களில் காவல் துறையினா், தீயணைப்பு துறையினா், வருவாய் துறையினா் உள்ளிட்டோா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

Summary

Ban on coracle operations in the Cauvery River at Hogenakkal continues for the second day

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.