தாமிரபரணி ஆற்றில் இறந்தவர்கள் ஆடை, பொருள்களை வீசத் தடை!அப்டேட் ஆன அம்மா உணவகம்! தவெக அரசின் வருகையால் புத்துயிர் பெற்றது!நாட்டில் சரி பாதி முதல்வர்கள் மீது குற்ற வழக்குகள்!தூங்கிக் கொண்டிருப்பது யார்? திமுகவுக்கு தவெக விளக்கம்தேனிலவு கொலை: சோனம் ரகுவன்ஷி நீதிமன்றத்தில் சரண்செந்தில் பாலாஜி முன்ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு! சென்னை தலைமைச் செயலகத்தில் 3 பெண்கள் தற்கொலை முயற்சி! பிரேசில் அணியின் நட்சத்திர வீரர் நெய்மர் ஓய்வு!ஓய்வை அறிவித்தார் அஜிங்க்யா ரஹானே!
/

தாமிரபரணி ஆற்றில் இறந்தவர்கள் ஆடை, பொருள்களை வீசத் தடை!

தாமிரபரணி ஆற்றில் இறந்தவர்கள் ஆடை, பொருள்களை வீசத் தடை விதித்திருப்பது பற்றி...

News image

சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு - கோப்புப் படம்

Updated On :30 ஜூலை 2026, 3:43 pm IST

தாமிரபரணி ஆற்றில் இறந்தவர்களின் ஆடை, பொருள்களை சடங்கு என்ற பெயரில் வீசுவதற்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது.

தாமிரபரணி ஆற்றின் கரைகளில் இறந்தவர்களுக்கு சடங்குகள் செய்யும்போது, அவர்கள் பயன்படுத்திய ஆடை, பொருள்கள் போன்றவை வீசிச் செல்வதால், ஆற்றின் நீர் மாசுபடுவதாக சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை அமர்வு, தாமிரபரணி ஆற்றில் இறந்தவர்களின் ஆடை, பொருள்களை சடங்கு என்ற பெயரில் வீசுவதற்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

இறந்தவர்களுக்கு சடங்குகள் செய்யும்போது, அவர்களின் அஸ்தியை மட்டுமே கரைக்க வேண்டும் என்றும், பானையை நீரில் வீசக் கூடாது என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மேலும், தாமிரபரணி ஆற்றை மாசுபடுத்துபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று உள்ளாட்சிகளில் தீர்மானம் நிறைவேற்றவும், ஆற்றை அசுத்தப்படுத்துவதை தடுக்க மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

அதேபோல், தாமிரபரணி ஆற்றை அசுத்தப்படுத்துவது நீதிமன்ற அவமதிப்பாக கருதப்படும் என்று எச்சரிக்கையையும் உயர் நீதிமன்றம் விடுத்துள்ளது.

Summary

Ban on discarding the clothes and belongings of the deceased into the Thamirabarani River!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.