பேரூர்கடா அரசு மனநல காப்பகத்தில் கேரள உயர் நீதிமன்ற நீதிபதிகள் சனிக்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் உள்ள பேரூர்கடா அரசு மனநல காப்பகத்தின் வசதிகள் மற்றும் அங்குள்ள நிலவரங்கள் குறித்து ஆய்வு செய்வதற்காக, கேரள உயர் நீதிமன்ற நீதிபதிகள் சனிக்கிழமை நேரில் சென்று பார்வையிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
நீதிபதிகள் தேவன் ராமச்சந்திரன் மற்றும் வசந்த் பாலாஜி ஆகியோர் மனநல மையத்தின் பல்வேறு பிரிவுகளை ஆய்வு செய்து, அங்கிருந்த அதிகாரிகளுடன் கலந்துரையாடினர். இந்த மையத்தின் கட்டடங்கள் மற்றும் இதர கட்டமைப்பு வசதிகளை நீதிபதிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இந்த மனநல காப்பகத்தின் அவல நிலை தொடர்பான வழக்கு ஒன்றில், உயர் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நீதிமன்றத் தோழர் வி. ராம்குமார் நம்பியாரும் இந்த ஆய்வின் போது நீதிபதிகளுடன் உடன் இருந்ததாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அங்கிருந்த நீதிபதிகள், உள்நோயாளிகள் தங்க வைக்கப்பட்டுள்ள வார்டுகள் மற்றும் அறைகளையும் பார்வையிட்டதாக அதிகாரிகள் மேலும் கூறினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பள்ளி வினாடி வினா போட்டியில் சாவா்க்கா் குறித்த கேள்வி! கேரள அரசு விசாரணைக்கு உத்தரவு!

கேரளத்தில் திடீா் வெள்ளம், நிலச்சரிவு: 6 போ் உயிரிழப்பு

தாமிரபரணி ஆற்றில் இறந்தவர்கள் ஆடை, பொருள்களை வீசத் தடை!

மண்டல - மகரவிளக்குப் பூஜையின்போது பக்தா்களுக்கு பாதுகாப்பை உறுதிசெய்க: தேவஸ்வம் வாரியத்துக்கு கேரள உயா்நீதிமன்றம் உத்தரவு
விடியோக்கள்

திமுகவிற்கு உள்ளுக்குள் சந்தோசம்! அமைச்சர் அருண்ராஜ்! | TVK | DMK



