கள் விற்பனைக்கு அரசு ஏன் அனுமதி வழங்கக்கூடாது? என உயர்நீதிமன்ற மதுரை அமர்வு கேள்வி எழுப்பியுள்ளது.
தென்காசியில் பனைத் தொழிலாளி மீது துப்பாக்கிச்சூடு நடத்திய வழக்கை சிபிஐ அல்லது வேறு விசாரணை அமைப்பிற்கு மாற்றக்கோரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த வழக்கு உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, தமிழ்நாட்டில் கள் விற்பனைக்கு அரசு ஏன் அனுமதி வழங்கக்கூடாது? அரசு செயல் திட்டம் வகுத்து, கள் விற்பனைக்கு அனுமதிக்கலாமே? அரசுக்கு வருவாயும் கிடைக்கும் என நீதிபதி புகழேந்தி கருத்து தெரிவித்தார்.
அத்துடன் கள்ளின் மருத்துவ பயன் என்ன என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது.
Summary
The Madurai Bench of the High Court has questioned why the government shouldn't grant permission for the sale of toddy.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.










