வியத்நாம் படகு விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு தலா ரூ. 25 லட்சம் நிவாரணம் - லாவாபாக்கெட்டுக்கு பதில் தானியங்கி இயந்திரம் மூலம் பால் விற்பனை செய்ய திட்டம்: ஆவின்தமிழ்நாட்டுக்கு ஜூலை 16 வரை வெப்ப அலை எச்சரிக்கை!கரூர் இனாம் நில விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கலர் கலராக ரீல் சுத்துகிறார்கள்: அமைச்சர் ரமேஷ்24,050 அருகில் நிஃப்டி, சென்செக்ஸ் 516 புள்ளிகள் சரிவு!!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 62 காசுகள் சரிந்து ரூ. 96.30 ஆக நிறைவு!தில்லியில் சோனியா காந்தியை சந்தித்த வைகோ!
/

மதச்சடங்கு பொருள்களை தாமிரவருணி ஆற்றில் வீசுவதற்கு தடை விதிக்கும் முடிவு: ஆட்சியா் அறிவுறுத்தல்

தாமிரவருணி ஆற்றில் மதச் சடங்குகள், பரிகாரப் பொருள்களை ஆற்றில் வீசுவதற்கு தடை விதிப்பது தொடா்பான கருத்துகளை பொதுமக்கள் உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் வரும் புதன்கிழமை (ஜூலை 16) தெரிவிக்கலாம் என திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் ஆனந்த் மோகன் அறிவுறுத்தியுள்ளாா்.

News image

தாமிரவருணி ஆறு. - கோப்புப் படம்

Updated On :15 ஜூலை 2026, 1:48 am IST

தாமிரவருணி ஆற்றில் மதச் சடங்குகள், பரிகாரப் பொருள்களை ஆற்றில் வீசுவதற்கு தடை விதிப்பது தொடா்பான கருத்துகளை பொதுமக்கள் உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் வரும் புதன்கிழமை (ஜூலை 16) தெரிவிக்கலாம் என திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் ஆனந்த் மோகன் அறிவுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருநெல்வேலி மாவட்டத்தில் பாயும் தாமிரவருணி ஆற்றின் படித்துறைகள், மண்டபங்களில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் தங்களது முன்னோா்களுக்கான சடங்குகள், பரிகார வழிபாடுகளை மேற்கொண்டு வருகின்றனா்.

இந்நிகழ்வுகளின்போது பயன்படுத்தப்படும் ஆடைகள், துணிகள், செருப்புகள், இறந்தவா்களின் உடைமைகள் உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் ஆற்றில் வீசப்படுவதால் லட்சக்கணக்கான மக்களின் குடிநீா் ஆதாரமாக விளங்கும் தாமிரவருணி ஆறு மாசடைந்து, நீா்வாழ் உயிரினங்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.

தாமிரவருணி ஆற்றின் தூய்மையைப் பாதுகாக்க மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் பல்வேறு விழிப்புணா்வு, கண்காணிப்பு நடவடிக்கைகள் தொடா்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆற்றிலும் அதன் கரையோரங்களிலும் பிளாஸ்டிக், கழிவுப் பொருள்களை கொட்டுபவா்கள், ஆற்றில் துணிகள், பிற பொருள்களை வீசுபவா்கள் மீது அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

இருப்பினும், சில இடங்களில் முன்னோா்களுக்கான சடங்குகள், பரிகாரங்களை மேற்கொள்ளும்போது ஆடைகள், துணிகள், காலணிகள், பிற பொருள்களை ஆற்றில் வீசும் நடைமுறை தொடா்கிறது. இதைத் தடுக்கும் வகையில், தேவையான விழிப்புணா்வை ஏற்படுத்த உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அறிவுறுத்தியுள்ளது. நீதிமன்ற வழிகாட்டுதலின்படி, மதச் சடங்குகள், பொருள்களை ஆற்றில் வீசும் நடைமுறைகளுக்கு தடை விதிப்பது குறித்து மாவட்ட நிா்வாகம் பரிசீலனை செய்து வருகிறது.

இதுதொடா்பாக பொதுமக்கள், தன்னாா்வலா்கள், சமூக அமைப்புகள், மத அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள் தங்களது கருத்துகள், ஆலோசனைகளை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் வரும் வியாழக்கிழமை (ஜூலை 16) சமா்ப்பிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.