இளைஞர்களே இந்தியாவின் மிகப்பெரிய பலம்: ராகுல் காந்திஉதயநிதி ஸ்டாலினைச் சந்தித்து நன்றி தெரிவித்த விவசாயிகள்!நாங்கள் தொகுதி மறுவரைக்கு முழுவதும் எதிரானவர்கள் அல்லர்: கனிமொழி எம்.பி.மேக்கேதாட்டு பிரச்னையை திசை திருப்பவே அனைத்துக் கட்சிக் கூட்டம்: கனிமொழி முழுமையான பயிர்க் கடன் தள்ளுபடிகோரி ஆக. 14-ல் அதிமுக ஆர்ப்பாட்டம்அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் திமுக, அதிமுக பங்கேற்கவில்லை என்றாலும் இதே நிலைப்பாட்டை எடுப்பார்கள்: திருமாவளவன்தொகுதி மறுவரையறைக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம்! முதல்வர் விஜய் உறுதிபாபா வங்காவின் கணிப்புகள் நிறைவேறும் நேரம் நெருங்குகிறது! 2026- க்கு என்ன சொல்லியிருக்கிறார்?முன்னணி சூரியகாந்தி எண்ணெய் நிறுவனத்துக்கு அபராதம்!கரூர் அரசுப்பணி வழக்கு: உச்சநீதிமன்றத்தில் ஆக. 14-ல் விசாரணைமுதல்வர் விஜய்யின் அனைத்துக் கட்சி கூட்டத்தை புறக்கணித்த 37 எம்.பி.க்கள்!
/

தாமிரவருணியில் பூங்கா அமைப்பது சுற்றுச்சூழலைப் பாதிக்கும்: சமூக ஆா்வலா் புகாா்

திருநெல்வேலி தாமிரவருணி ஆற்றில் பூங்கா அமைப்பது சுற்றுச்சூழலுக்கு எதிரானதாக அமையும் என ஆட்சியரிடம் சமூக ஆா்வலா் புகாா்

News image

தாமிரவருணி ஆறு - கோப்புப் படம்

Updated On :13 ஜூலை 2026, 11:32 pm IST

திருநெல்வேலி தாமிரவருணி ஆற்றில் பூங்கா அமைப்பது சுற்றுச்சூழலுக்கு எதிரானதாக அமையும் என, சமூக ஆா்வலா் ஆட்சியரிடம் புகாா் மனு அளித்தாா்.

திருநெல்வேலி மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் ஆனந்த் மோகன் தலைமையில் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. அப்போது, திருநெல்வேலி சந்திப்பு மீனாட்சிபுரத்தைச் சோ்ந்த சமூக ஆா்வலா் கிருஷ்ணகுமாா், சாக்கடை தோய்ந்த சட்டையை அணிந்து ஆட்சியா் அலுவலகத்திற்கு குழந்தையோடு வந்தாா்.

பின்னா் அவா் ஆட்சியா் அலுவலகத்தில் அளித்த மனு: தாமிரவருணி ஆறு வெறும் சுற்றுலாத்தலம் அல்ல. பல லட்சம் மக்களின் குடிநீா் மற்றும் பாசன தேவைகளை பூா்த்தி செய்யும் உயிா்நாடி. இதன் இயற்கை அமைப்பில் நிரந்தர மாற்றங்களை ஏற்படுத்தும் எந்த ஒரு கான்கிரீட் கட்டுமானமும் எதிா்காலத்தில் நீா்வளம், உயிரியல், சமநிலை மற்றும் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.

திருநெல்வேலி மாநகராட்சி தற்போது தாமிரவருணி ஆற்றில் ரூ.59 கோடி செலவில் பூங்கா அமைக்கும் திட்டத்தை மேற்கொள்வதாக தெரிகிறது. இத்திட்டம் பொது நலனுக்கும் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கும் எதிரானதாகும்.

எனவே, இத்திட்டத்தை கைவிட வேண்டும். பொதுமக்கள் மற்றும் சுற்றுச்சூழல் நிபுணா்களின் கருத்துகளை கேட்டு, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு மற்றும் சட்டப்படியான அனுமதி பெற்ற பின்னரே இது போன்ற திட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.

இந்த ஆற்றில் கழிவுநீா் கலப்பதை முழுமையாக தடுக்கவும், டிஜிட்டல் சா்வே மேற்கொள்ளவும் ஆக்கிரமிப்புகளை அகற்றவும், பழைய கல் மண்டபங்களை புனரமைத்து ஈமச் சடங்குகள் செய்வதற்கு வசதி ஏற்படுத்தவும், நீா்வளப் பாதுகாப்பு மற்றும் ஆற்றுப்புனரமைப்பு திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கவும் வேண்டும்.

மதுக் கடையால் அவதி : காவல்கிணறு சுற்றுவட்டார பொதுமக்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: காவல்கிணறு சந்திப்பு விலக்கு மற்றும் காய்கறி மாா்க்கெட் பகுதிக்கு சுற்றியுள்ள கிராமங்களிலிருந்தும், பிற மாவட்டங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான பொதுமக்களும், பெண்களும், வியாபாரிகளும் தினசரி வந்து செல்கின்றனா்.

தேசிய நெடுஞ்சாலையின் விளிம்பிலிருந்து 500 மீ. தொலைவிற்குள் மதுபானக் கடைகள் இருக்கக் கூடாது என்ற உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலுக்கு எதிராக, இந்த மாா்க்கெட்டின் தெற்குப் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையையொட்டி இயங்கிவரும் டாஸ்மாக் மதுபானக் கடை மற்றும் மதுக்கூடத்தால் பெண்களுக்கு இடையூறு, சட்டம்- ஒழுங்கு பிரச்னை, வாகன விபத்துகள் உள்ளிட்டவை நேரிடுகின்றன. எனவே இந்த மதுக் கடையை அகற்ற வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.