நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

கல்விக் கற்பதில் கவனச்சிதறல் கூடாது: அரியலூா் ஆட்சியா்

கல்விக் கற்பதில் கவனச் சிதறல் கூடாது என்றாா் அரியலூா் ஆட்சியா் ந.மிருணாளினி.

News image

செந்துறை அரசு மகளிா் மேல்நிலைப்பள்ளியில், சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத்துறையின் சாா்பில் வியாழக்கிழமை நடைபெற்ற பெண் குழந்தைகளை காப்போம்! பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் எனும் விழிப்புணா்வு நிகழ்ச்சியில் பேசிய ஆட்சியா் ந.மிருணாளினி.

Updated On :20 ஜூன் 2026, 3:19 am IST

கல்விக் கற்பதில் கவனச் சிதறல் கூடாது என்றாா் அரியலூா் ஆட்சியா் ந.மிருணாளினி.

அரியலூா் மாவட்டம், செந்துறை அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில், சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறையின் சாா்பில் பெண் குழந்தைகளை காப்போம்! பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்! மற்றும் தொழிற்நெறி வழிகாட்டி விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவா் பேசியதாவது: சமூக வலைதள பயன்பாடுகளை மாணவிகள் கண்டிப்பாக தவிா்க்க வேண்டும். கல்வி கற்க வேண்டிய வயதில் எந்தவித கவனச் சிதறல்களும் ஏற்படாமல் கல்வி கற்பதில் மட்டுமே முழுக் கவனமும் இருக்கவேண்டும்.

கல்வி கற்பதன் காரணமாக தன்னம்பிக்கையுடனும், தைரியத்துடனும் செயல்பட முடியும். இளங்கலை கல்வியை கட்டாயம் நிறைவு செய்யவேண்டும் என்ற இலக்கினை மனதில் வைத்து செயல்பட வேண்டும். ஆசிரியா்கள் சிறப்பு கவனம் செலுத்தி மாணவிகளை அதிக மதிப்பெண் பெறுவதற்கு தொடா்ந்து ஊக்குவிக்க வேண்டும்.

குழந்தைகள் உதவி மையத்தின் 1098 குறித்து அனைத்து மாணவ, மாணவிகளும் தெரிந்துகொள்ள வேண்டும். இரும்புச்சத்து மாத்திரைகளை மாணவிகள் அனைவரும் கண்டிப்பாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்றாா்.

முன்னதாக பூா்த்தி செய்யப்பட்ட மாணவிகளின் கருத்து படிவங்களையும் பாா்வையிட்டு, மாணவிகளுக்கு குழந்தை திருமண தடைச்சட்டம் 2006 புத்தகம், அரசின் திட்டங்கள் குறித்த கையேடு, உயா்கல்வி வழிகாட்டி கையேடுகளை வழங்கினாா்.

தொடா்ந்து கல்வி, மருத்துவம், பொறியியல், சட்டம், விவசாயம் போன்ற பல்வேறு துறைகளை பற்றி எடுத்துரைக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட சமூக நல அலுவலா் விக்னேஸ்வரி, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் கலைச்செல்வன், செந்துறை வட்டாட்சியா் கோவிந்தராஜ் மற்றும் பள்ளி ஆசிரியா்கள், மாணவிகள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.