2029-க்குள் பாஜக ஆளும் மாநிலங்களில் பொது சிவில் சட்டம்: அமித் ஷாதொடர் விடுமுறை: செப். 14, 15 தேதிகளில் 3,565 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்தமிழக வரலாற்றில் இதுபோன்ற டம்மி முதல்வரை பார்த்ததில்லை: உதயநிதிதமிழ்நாட்டில் இனி யார் ஆட்சிக்கு வந்தாலும் கூட்டணி ஆட்சிதான்: திருமாவளவன்விநாயகர் சதுர்த்தி: நாகர்கோவில் - தாம்பரம் நாளை சிறப்பு ரயில் அறிவிப்பு

அயோத்தி: ஆற்றில் படகில் அமர்ந்து அசைவம் சாப்பிட்ட 3 பேர் கைது

அயோத்தியில் ஆற்றில் படகில் அமர்ந்து அசைவம் சாப்பிட்டவர்கள் மீது போலீஸ் நடவடிக்கை... .

 3 arrested in Ayodhya for eating meat in river boat

கைது

Published On :

அயோத்தியில் ஆற்றில் படகில் அமர்ந்து அசைவம் சாப்பிட்டதாக 3 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

உத்தர பிரதேச மாநிலம், குப்தார் காட் பகுதியில் சரயு ஆற்றில் படகு ஒன்றில் நான்கு பேர் அசைவ உணவு மற்றும் மது அருந்தும் காட்சிகள் அடங்கிய காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் பரவியது. இதையடுத்து அவர்களிம் 3 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

இதுகுறித்து நகரப் பிரிவு காவல் அதிகாரி ஷ்ரியாஷ் திரிபாதி ஞாயிற்றுக்கிழமை கூறுகையில், " அந்தக் காணொளியில் நான்கு இளைஞர்கள் ஆட்டிறைச்சி சாப்பிடுவதும் மது அருந்துவதும் பதிவாகியிருந்தது. அவர்களில் 3 பேரை நாங்கள் கைது செய்துள்ளோம். ஒருவர் தலைமறைவாக உள்ளார்," என்று தெரிவித்தார்.

கைதானவர்கள் லவ்குஷ் நிஷாத், ஜிதேந்திர நிஷாத் மற்றும் ராஜ்குமார் நிஷாத் ஆகியோர் என்றும் புனிதமாகக் கருதப்படும் அந்த ஆற்றின் மீதான பக்தர்களின் நம்பிக்கைக்கு அவர்கள் களங்கம் விளைவித்துள்ளனர் என்றும் போலீஸ் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

முன்னதாக ஜூன் மாதத்தில், வாரணாசியில் கங்கை ஆற்றில் படகில் கோழி இறைச்சி சமைத்து பீர் அருந்தியதாக ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களது படகும் பறிமுதல் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Summary

Police here have arrested three men for eating mutton and drinking alcohol on the Saryu River, an officer said on Sunday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.