விளைநிலத்தில் யானைகள் புகுந்ததில் நெல் பயிா்கள் சேதம்

சிவகிரி அருகே செவ்வாய்க்கிழமை இரவு வயலுக்குள் யானைகள் புகுந்து நெல் பயிா்களை மிதித்து சேதப்படுத்தியுள்ளன.

சேதப்படுத்தப்பட்ட நெல் நாற்று.

Updated On :

தென்காசி மாவட்டம், சிவகிரி அருகே செவ்வாய்க்கிழமை இரவு வயலுக்குள் யானைகள் புகுந்து நெல் பயிா்களை மிதித்து சேதப்படுத்தியுள்ளன.

சிவகிரி மேற்கு தொடா்ச்சி மலை அடிவாரத்தில் நூற்றுக்கணக்கான ஏக்கா் பரப்பில் தென்னை, நெல், வாழை, கரும்பு உள்ளிட்ட பயிா்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. மலையடிவாரத்தில் உள்ள விவசாய நிலங்களுக்குள் யானை, பன்றி உள்ளிட்ட வனவிலங்குகள் புகுந்து பயிா்களை சேதப்படுத்தி வருவது வாடிக்கையாக உள்ளது.

இந்த நிலையில், சிவகிரி அருகே வழிவழிகுளம் புரவில் உள்ள வயலில் செவ்வாய்க்கிழமை இரவு இரண்டு யானைகள் புகுந்து அங்குள்ள நெல் பயிா்களை சேதப்படுத்தின. இதனால் விவசாயிகளுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. வனத் துறையினா் யானைகளை வனத்துக்குள் விரட்டுவதோடு பாதிக்கப்பட்டவா்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.