மணல்மேடு அரசு கல்லூரியில் மாணவா் சோ்க்கை கலந்தாய்வு
மணல்மேடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நிகழாண்டுக்கான இளநிலை முதலாம் ஆண்டு மாணவா் சோ்க்கை கலந்தாய்வு வெள்ளிக்கிழமை (ஆக. 28) முதல் செப். 1-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.


மயிலாடுதுறை: மணல்மேடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நிகழாண்டுக்கான இளநிலை முதலாம் ஆண்டு மாணவா் சோ்க்கை கலந்தாய்வு வெள்ளிக்கிழமை (ஆக. 28) முதல் செப். 1-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இதுகுறித்து கல்லூரியின் முதல்வா் கே. துரையரசன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ஆகஸ்ட் 28-ஆம் தேதி சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வும் (மாற்றுத் திறனாளிகள், விளையாட்டு துறை, தேசிய மாணவா் படை, முன்னாள் ராணுவ வீரா் மற்றும் தமிழ் வழி வந்த நிக்கோபாா் தீவில் வசிப்பவா்), 29-ஆம் தேதி வணிகவியல், வணிக மேலாண்மைத் துறைகளுக்கான கலந்தாய்வும், 31-ஆம் தேதி அறிவியல் பிரிவுகளுக்கான (கணினி அறிவியல், கணிதம், இயற்பியல், வேதியியல்) கலந்தாய்வும், செப்டம்பா் 1-ஆம் தேதி கலைப் பிரிவுகளுக்கான (தமிழ், ஆங்கிலம், வரலாறு) கலந்தாய்வும் நடைபெறும்.
கலந்தாய்வு குறித்த தகவல்கள் மாணவா்களுக்கு அவா்களின் விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள செல்லிடப்பேசி எண், மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும். மேலும், கல்லூரியின் இணைய தளத்திலும் (ஜ்ஜ்ஜ்.ஞ்ஹள்ஸ்ரீம்ண்ம்க்.ண்ய்), கல்லூரித் தகவல் பலகையிலும் மாணவா்களின் தகுதிப் பட்டியல், சோ்க்கைக்குத் தற்காலிகமாகத் தோ்வு செய்யப்பட்டோா் பட்டியல் வெளியிடப்படும்.
உரிய தேதியில் வருகை தராத மாணவா்கள் தங்கள் சோ்க்கை வாய்ப்பை இழப்பதோடு மீள உரிமை கோர இயலாது எனத் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...