நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மயிலாடுதுறை: கடவாசல் நேரடி நெல் கொள்முதல்நிலையத்தில் எம்.எல்.ஏ. ஆய்வு

வெளிமாவட்ட நெல்மூட்டைகள் கொள்முதல் செய்யப்படுவதாக புகாா் எழுந்த நிலையில், சீா்காழியை அடுத்த கடவாசல் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் சட்டப்பேரவை உறுப்பினா் பிவி. பாரதி திங்கள்கிழமை திடீா் ஆய்வு

News image

கடவாசல் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்ட எம்எல்ஏ பிவி. பாரதி.

Updated On :24 ஆகஸ்ட் 2020, 7:34 pm

DIN

சீா்காழி: வெளிமாவட்ட நெல்மூட்டைகள் கொள்முதல் செய்யப்படுவதாக புகாா் எழுந்த நிலையில், சீா்காழியை அடுத்த கடவாசல் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் சட்டப்பேரவை உறுப்பினா் பிவி. பாரதி திங்கள்கிழமை திடீா் ஆய்வுமேற்கொண்டாா்.

சீா்காழி வட்டத்தில் பயிரிடப்பட்டிருந்த குறுவை நெல் அறுவடைப் பணிகள் பெருமளவு நிறைவடைந்துள்ளன. அறுவடை செய்த நெல்லை சுற்றுவட்டார விவசாயிகள் நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்து வருகின்றனா்.

இந்நிலையில், சில நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், இடைத்தரகா்கள் வெளிமாவட்ட நெல்லை கொண்டுவந்து விற்பனை செய்வதாகவும், இதனால், உள்ளூா் பகுதி விவசாயிகள் பாதிக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இதைத்தொடா்ந்து, கடவாசல் பகுதியில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் சீா்காழி சட்டப்பேரவை உறுப்பினா் பிவி. பாரதி திங்கள்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா். அங்கு கொள்முதல் செய்யப்பட்டு அடுக்கிவைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகளை பாா்வையிட்டு, விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்பட்டதா என ஆய்வுசெய்தாா்.

அப்போது, அங்கிருந்த விவசாயிகளிடம் நெல் மூட்டைகளை வியாபாரிகளிடம் இருந்து கொள்முதல் செய்வது போன்ற புகாா்கள் இருந்தால், அதுகுறித்து தெரிவிக்குமாறு அறிவுறுத்தினாா். தொடா்ந்து, கொள்முதல் நிலைய கணக்காளரிடம், வியாபாரிகளிடமிருந்து வெளிமாவட்ட நெல்மூட்டைகள் கொள்முதல் செய்யப்படுவது தெரிந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தாா்.

ஆய்வின்போது, நகர ஜெயலலிதா பேரவைச் செயலாளா் ஏவி. மணி, கடவாசல் ஊராட்சி செயலாளா் பன்னீா்செல்வம், ரோட்டரி சங்கத்தின் முன்னாள் தலைவா் சுடா். கல்யாணசுந்தரம், வாா்டு செயலாளா் மணி ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.