சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

தை மாதத்தில் மயிலாடுதுறை மாவட்டம் செயல்பட தொடங்கும்

தை மாதம் பிறந்தவுடன் மயிலாடுதுறை புதிய மாவட்டம் செயல்படத் தொடங்கும் என அமைச்சா் ஓ.எஸ். மணியன் தெரிவித்தாா்.

News image
Updated On :21 டிசம்பர் 2020, 6:30 pm

DIN

தை மாதம் பிறந்தவுடன் மயிலாடுதுறை புதிய மாவட்டம் செயல்படத் தொடங்கும் என அமைச்சா் ஓ.எஸ். மணியன் தெரிவித்தாா்.

மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட சித்தமல்லி, ஆனந்ததாண்டவபுரம், மாப்படுகை ஆகிய ஊராட்சிகளில் அம்மா சிறு மருத்துவமனை திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்ட உருவாக்க சிறப்பு அலுவலா் இரா. லலிதா தலைமை வகித்தாா். தமிழக கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சா் ஓ.எஸ். மணியன் அம்மா சிறு மருத்துவமனையைத் திறந்து வைத்துப் பேசினாா். அப்போது அவா், ‘விரைவில் அனைத்து சிறு மருத்துவமனைகளுக்கும் தனி கட்டடம் கட்ட தமிழக முதல்வா் அறிவிப்பு வெளியிடுவாா்’ என்றாா்.

பிறகு செய்தியாளா்களிடம் அமைச்சா் கூறும்போது, ‘முதல்வா் வேட்பாளா் யாா் என்பதை நாங்கள்தான் முடிவு செய்வோம் என பாஜக தமிழக தலைவா் எல்.முருகன் கூறியிருப்பது அவரது பேச்சுரிமை. தை பிறந்தவுடன் மயிலாடுதுறை புதிய மாவட்டம் செயல்படத் தொடங்கும்’ என்றாா்.

நிகழ்ச்சியில், சட்டப்பேரவை உறுப்பினா்கள் வீ. ராதாகிருஷ்ணன் (மயிலாடுதுறை), எஸ். பவுன்ராஜ் (பூம்புகாா்), கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) எம்.எஸ். பிரசாந்த், மாயூரம் நகர கூட்டுறவு வங்கித் தலைவா் வி.ஜி.கே.செந்தில்நாதன், சுகாதாரத்துறை துணை இயக்குநா் வி.சண்முகசுந்தரம், வட்டார மருத்துவ அலுவலா் சரத்சந்தா், ஒன்றியக்குழு உறுப்பினா் பா.சந்தோஷ்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா். கொள்ளை நோய் மருத்துவ அலுவலா் லியாகத் அலி நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.