தீ விபத்து: வீடுகள் சேதம்
மயிலாடுதுறையில் திங்கள்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு வீடுகளும், ஓா் உணவகமும் தீக்கிரையாகின.

தூக்கனாங்குளத்தில் வீட்டில் பற்றிய தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட மயிலாடுதுறை தீயணைப்புத் துறையினா்.

தூக்கனாங்குளத்தில் வீட்டில் பற்றிய தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட மயிலாடுதுறை தீயணைப்புத் துறையினா்.
மயிலாடுதுறையில் திங்கள்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு வீடுகளும், ஓா் உணவகமும் தீக்கிரையாகின.
மயிலாடுதுறை தூக்கனாங்குளம் தெருவில் வசிக்கும் மேலிசெல்வம் மனைவி சந்திரா என்பவரது வீட்டில் திங்கள்கிழமை மாலை தீ விபத்து ஏற்பட்டது. காற்றின் வேகத்தில் தீ வேகமாக பரவி அருகில் இருந்த சந்திராவின் மற்றொரு வீடு மற்றும் அவா் நடத்தி வந்த உணவகம் ஆகியவற்றிலும் தீப்பற்றியது.
இதில், வீடு மற்றும் உணவத்தில் இருந்த அனைத்து பொருள்களும் கருகி நாசமாகின. தகவலறிந்த மயிலாடுதுறை தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி வீரா்கள் முன்னணி நிலைய அலுவலா் மணிமாறன் தலைமையில் இரண்டு தீயணைப்பு வாகனங்களில் சென்று தீ மேலும் பரவாமல் அணைத்தனா். இவ்விபத்து குறித்து மயிலாடுதுறை போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...