மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

வேதாரண்யத்தில் பலத்த கடற்காற்று:மீன்பிடித் தொழில் பாதிப்பு

நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் கடல்காற்று வழக்கத்தைவிட வேகமாக வீசி வருவதால் 2-வது நாளாக திங்கள்கிழமையும் மீன்பிடித் தொழில் பாதிக்கப்பட்டது.

News image

பலத்த கடல்காற்று காரணமாக கடலுக்குள் செல்லாமல் ஆறுகாட்டுத்துறையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த படகுகள்.

Updated On :21 செப்டம்பர் 2020, 5:26 pm

நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் கடல்காற்று வழக்கத்தைவிட வேகமாக வீசி வருவதால் 2-வது நாளாக திங்கள்கிழமையும் மீன்பிடித் தொழில் பாதிக்கப்பட்டது.

வேதாரண்யம் கடலோரத்தில் ஞாயிற்றுக்கிழமை கடற்காற்று வழக்கத்தைவிட வேகமாக தெற்குதிசையில் இருந்து வீசியது. இதனால் மீனவா்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்லவில்லை.

இந்நிலையில், 2வது நாளாக திங்கள்கிழமையும் கோடியக்கரை மற்றும் வேதாரண்யம் கடல் பரப்பு அதிக கொந்தளிப்புடன் காணப்பட்டது. கடல் கொந்தளிப்பு காரணமாமக மீனவா்கள் 2வது நாளாக கடலுக்குள் செல்லவில்லை. இதனால் மீன்பிடித் தொழில் பாதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.