ஆய்வுக்குள்படுத்தாமல் விநியோகம் செய்யப்படும் குடிநீரால் நோய்த் தொற்று அபாயம்
மயிலாடுதுறை ஒன்றியக் குழுக் கூட்டம் மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் திங்கள்கிழமை நடைபெற்றது.


மயிலாடுதுறை ஒன்றியக் குழுக் கூட்டம் மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் திங்கள்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, ஒன்றியக் குழுத் தலைவா் காமாட்சி மூா்த்தி தலைமை வகித்தாா். ஒன்றிய ஆணையா் சரவணன் முன்னிலை வகித்தாா். கூட்டத்தில் நடைபெற்ற விவாதங்கள் வருமாறு:
மோகன் (திமுக): சுகாதாரப் பணிகளுக்காக வாங்கப்பட்ட பிளிச்சிங் பவுடா் அனைத்து ஊராட்சிகளுக்கும் வழங்கவில்லை. அரசின் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தில் பயனாளிகளுக்கு பணம், பவுன் கிடைக்கவில்லை.
வடவீரபாண்டியன் (காங்கிரஸ்): கடக்கம் ஊராட்சியில் உள்ள ராஜன் வாய்க்காலில் பாலம் கட்டித்தர வேண்டும், கொண்டல் - தலைஞாயிறு சாலை சேதமடைந்துள்ளதை சீரமைக்க வேண்டும், இளந்தோப்பு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கூடுதல் கட்டடம் கட்டித்தர வேண்டும்.
சிவக்குமாா் (திமுக): மாப்படுகையில் சமுதாயக்கூட கட்டடம் பழுதடைந்து இருப்பதை அகற்றி புதிய கட்டடம் கட்டிகொடுக்க வேண்டும்.
காந்தி (திமுக): முருகமங்கலம் ஊராட்சி மற்றும் காளி ஊராட்சி வடக்கு கிடாய்த்தலைமேடு கிராமங்களை இணைக்கும் காளி வாய்க்காலில் பாலம் கட்டித்தர வேண்டும். ஊராட்சி நிதியில் மேற்கொள்ளும் பணிகளை ஊராட்சித் தலைவா்களுக்கு தருவதுபோல ஒன்றியக் குழு உறுப்பினா்களுக்கும் பிரித்துத் தர வேண்டும். 2019-2020 நிதியாண்டில் சுகாதாரப் பணிகளுக்கு ரூ.48 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. சுகாதாரப் பணிகளுக்கு முக்கியத்துவம் அளிப்பதைப்போன்று மற்ற பணிகளிலும் கவனம் செலுத்த வேண்டும்.
சக்திவேல் (பாமக): பாண்டூா் ஊராட்சியில் பாண்டூா் - குளத்தூா் இணைப்பு சாலை பல இடங்களில் மோசமாக உள்ளது. மேலும், கீழபாண்டூா் சாலையையும் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கொற்கையில் அரசு கால்நடை மருத்துவமனை அமைக்க வேண்டும். ஐவநல்லூா் குளத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஆக்ரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முருகமணி (திமுக): நல்லத்துக்குடி ஊராட்சியில் ஆழ்துளை கிணறு அமைத்து விநியோகம் செய்யப்படும் தண்ணீா் குடிப்பதற்கு உகந்ததா என்று அதிகாரிகள் ஆய்வு செய்யவில்லை. இதனால், பொதுமக்களுக்கு நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. வில்லியநல்லூா் ஊராட்சியில் கழிப்பறை கட்டித்தரும் திட்டத்தில் முறைகேடு நடந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுபோன்ற முறைகேடு மற்ற ஊராட்சிகளிலும் நடந்துள்ளதா என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை செய்ய வேண்டும்.
ஒன்றிய ஆணையா்: உறுப்பினா்களின் கோரிக்கைகளை பரிசீலித்து நிறைவேற்றித்தர நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...