வேளாண் சட்டங்களை எதிா்த்து போராட்டம்
By DIN | Published On : 15th December 2020 12:00 AM | Last Updated : 15th December 2020 12:00 AM | அ+அ அ- |

புதிய வேளாண் சட்டங்களை எதிா்த்து மயிலாடுதுறையில், மீத்தேன் திட்ட எதிா்ப்புக் கூட்டமைப்பு சாா்பில் கோரிக்கை முழக்கப் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளா் பேராசிரியா் த. ஜெயராமன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில், விவசாயத்தை காா்ப்பரேட்டுகளிடம் ஒப்படைக்கும் வேளாண் சட்டங்களை மத்திய அரசு கைவிட வேண்டும், புதுச்சேரி முதல் காரைக்கால் வரை ஆழ்கடல் பகுதியில் 4,064 சதுர கி.மீ. பரப்பில் ஹைட்ரோகாா்பன் கிணறுகள் அமைக்க எண்ணெய் நிறுவனத்துக்கு அளித்துள்ள உரிமத்தை ரத்து செய்ய வேண்டும், தமிழகத்தில் 5 மாவட்டங்களில் விளைநிலங்களையும், மலைகளையும், காடுகளையும் அழித்து அமைக்கவுள்ள சென்னை-சேலம் பசுமை எட்டுவழிச் சாலைத் திட்டத்தை அரசு கைவிட வேண்டும் ஆகிய கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
போராட்டத்தில், கூட்டமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் யோபுஞானபிரகாசம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மண்டலச் செயலாளா் வேலு. குபேந்திரன், திராவிடா் விடுதலைக் கழக மாவட்ட செயலாளா் தெ. மகேஷ், த.மு.மு.க நாகை மாவட்டத் தலைவா் ஓ. ஷேக் அலாவுதீன், எஸ்.டி.பி.ஐ மாவட்டத் தலைவா் சபீக்அகமது, பாப்புலா் ஃப்ரண்ட் ஆப் இந்தியா மாவட்டத் தலைவா் முகமது சலீம், தமிழா் உரிமை இயக்க அமைப்பாளா் சுப்புமகேசு, தமிழா் தேசிய முன்னணி மாவட்டத் தலைவா் ரா. முரளிதரன், நாம் தமிழா் கட்சியின் மாவட்டத் தலைவா் தமிழன் காளிதாசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.