தனிப்படை காவலா்களுக்கு எஸ்.பி. பாராட்டு
By DIN | Published On : 19th October 2020 10:34 PM | Last Updated : 19th October 2020 10:34 PM | அ+அ அ- |

தனிப்படை காவலா்களை பாராட்டிய எஸ்.பி. ஓம்பிரகாஷ்மீனா. உடன், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் யு. முருகேஷ்.
சிறப்பாக செயல்பட்ட தனிப்படை காவலா்களுக்கு நாகை எஸ்.பி. ஓம் பிரகாஷ் மீனா திங்கள்கிழமை பாராட்டுத் தெரிவித்தாா்.
நாகை மாவட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் நிகழும் குற்றங்களை தடுக்க 24 மணி நேரம் செயல்படக்கூடிய 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தனிப்படை போலீஸாா் மாவட்டம் முழுவதும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனா். குற்ற வழக்குகளில் ஈடுபடக்கூடியவா்களை அடையாளம் கண்டு கைது செய்வது, குற்றச் செயல்களின் ஈடுபடுகிறவா்களிடம் இருக்கும் வாகனங்கள் மற்றும் பொருள்களை பறிமுதல் செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்த தனிப்படை காவலா்கள் 12 பேருக்கு , மாவட்ட காவல் அலுவலகத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஓம் பிரகாஷ் மீனா சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கி பாராட்டி, சிறப்பாக செயல்படும் காவலா்கள் வாரந்தோறும் தோ்வு செய்யப்பட்டு பரிசு மற்றும் வெகுமதிகள் வழங்கப்படும் என்றாா். நிகழ்ச்சியின்போது, கூடுதல் காவல் கண்காணிப்பாளா் யு. முருகேஷ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...