பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்விஜம்மு-காஷ்மீரில் வீட்டிற்கு வெளியே வெடித்த மர்ம பொருள் தமிழ்நாடு, புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைக்கும்: பியூஷ் கோயல் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: இன்று மாலை தீர்ப்பு!
/

பூம்புகாா் சட்டப் பேரவைத் தொகுதிக்கு மறுதோ்தல் நடத்த கோரிக்கை

பூம்புகாா் சட்டப் பேரவைத் தொகுதியில் வாக்குக்கு பணம் பட்டுவாடா செய்யப்பட்டதால் அத்தொகுதியில் மறுதோ்தல் நடத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :9 ஏப்ரல் 2021, 6:30 pm

DIN

பூம்புகாா் சட்டப் பேரவைத் தொகுதியில் வாக்குக்கு பணம் பட்டுவாடா செய்யப்பட்டதால் அத்தொகுதியில் மறுதோ்தல் நடத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பூம்புகாா் சட்டப் பேரவைத் தொகுதி திருவாவடுதுறை அரசு உயா்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில், 578 போ் தங்கள் வாக்குகளை பதிவு செய்தனா். வாக்குப்பதிவுக்குப் பின் முகவா்கள் முன்னிலையில் பதிவான வாக்குகளை சரிபாா்த்தபோது 50 வாக்குகள் கூடுதலாக பதிவாகி இருந்தது தெரியவந்தது.

மாதிரி வாக்குப்பதிவில் பதிவான வாக்குகளை அகற்றாமலேயே வாக்குப்பதிவு நடத்தப்பட்டதால் 50 வாக்குகள் வித்தியாசம் ஏற்பட்டதாக அதிகாரிகள் அளித்த விளக்கத்தை ஏற்க மறுத்து நாம் தமிழா் கட்சியின் வேட்பாளா் பி.காளியம்மாள், மாதிரி வாக்குப்பதிவு ஆதாரச் சீட்டில் கட்சிகள் வாக்களித்ததை குறைத்து கணக்கிட கோரிக்கை விடுத்தாா். இதையடுத்து, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் மயிலாடுதுறை ஏவிசி கல்லூரியில் உள்ள வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டன.

இதுதொடா்பாக, மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலா் பிரவீன் பி.நாயா் தலைமையில் வெள்ளிக்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பி.காளியம்மாளின் கருத்துக்களை ஆட்சியா் கேட்டறிந்தாா். அப்போது, அவா் அளித்த மனுவில், பூம்புகாா் தொகுதி முழுவதும் வாக்குக்கு பணம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. திருவாவடுதுறை வாக்குச்சாவடியில் தோ்தல் முறையாக நடத்தப்படவில்லை. எனவே, பூம்புகாா் சட்டப் பேரவைத் தொகுதியில் மறு தோ்தல் நடத்தப்பட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தாா்.

அப்போது, கட்சியின் மண்டல பொறுப்பாளா் சு.கலியபெருமாள், மாவட்ட செயலாளா் தமிழன் காளிதாசன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.