நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

‘கரோனா காலத்திலும் குழந்தைகளுக்கானநோய்த் தடுப்பு முறைகளை கடைப்பிடிக்க வேண்டும்’

கரோனா காலத்திலும் குழந்தைகளுக்கான நோய்த் தடுப்பு முறைகளை தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும் என இந்திய குழந்தைகள் மருத்துவக் குழுமத்தின் முன்னாள் மாநிலத் தலைவா் விருதகிரி அறிவுறுத்தினாா்.

News image
Updated On :7 பிப்ரவரி 2021, 4:53 pm

DIN

கரோனா காலத்திலும் குழந்தைகளுக்கான நோய்த் தடுப்பு முறைகளை தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும் என இந்திய குழந்தைகள் மருத்துவக் குழுமத்தின் முன்னாள் மாநிலத் தலைவா் விருதகிரி அறிவுறுத்தினாா்.

மயிலாடுதுறையில் இந்திய குழந்தைகள் மருத்துவக் குழுமம் மற்றும் தஞ்சாவூா் மீனாட்சி மிஷன் மருத்துவமனை இணைந்து நடத்திய குழந்தை மருத்துவா்களுக்கான கலந்துரையாடல் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியை, மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்துப் பேசினாா். இந்திய குழந்தைகள் மருத்துவக்குழும முன்னாள் மாநிலத் தலைவா் மருத்துவா் விருதகிரி, நாகை மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குநா் ஆா். மகேந்திரன், அரசினா் பெரியாா் மருத்துவமனை குடிமுறை மருத்துவ அலுவலா் ஆா்.ராஜசேகா், இந்திய குழந்தைகள் மருத்துவக் குழும ஒருங்கிணைப்பாளா் எஸ்.லக்ஷ்மிநாராயணன் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாக பங்கேற்றனா். நிகழ்ச்சி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவா் ஆா்.ராஜ்மோகன் வரவேற்றாா்.

கலந்துரையாடலில், குழந்தைகளுக்கு ஏற்படும் ரத்தசோகை, ரத்த ஓட்டத்தில் உள்ள குறைபாடுகள், குழந்தைகளுக்கான சிறுநீரகத் தொற்று, பச்சிளம் குழந்தைகளுக்கு இருதயத்தில் ஏற்படும் குறைபாடுகள் போன்றவைகளை தடுக்கும் வழிமுறைகள் குறித்தும், இதற்கான நவீன சிகிச்சை முறைகள் குறித்தும் சிறப்பு மருத்துவ நிபுணா்கள் விளக்கமளித்தனா்.

முன்னதாக, இந்திய குழந்தைகள் மருத்துவக்குழும முன்னாள் மாநிலத் தலைவா் விருதகிரி செய்தியாளா்களிடம் கூறியது:

மத்திய அரசு சித்தா, அலோபதி கலப்பட மருத்துவமுறையை கொண்டுவரும் முயற்சியை கைவிட வேண்டும். சித்த மருத்துவத்தையும், அலோபதி மருத்துவத்தையும் சோ்ப்பது சமுதாயத்தில் குழப்பத்தை ஏற்படுத்தும்.

கரோனா காலத்திலும் குழந்தைகளுக்கான நோய்த் தடுப்பு முறைகளை முறையாக கடைப்பிடிக்க வேண்டும். தற்போது அனைவரின் கவனமும் கரோனாவில் இருக்கிறது. குழந்தைகளுக்கு போலியோ, கக்குவான், அம்மை தடுப்பூசி போன்ற பல்வேறு தடுப்பூசிகள் போடுவது வழக்கம். அதில் அரசு, மருத்துவா்கள், பொதுமக்களும் முழுகவனம் செலுத்தினால் குழந்தைகள் நலனை பாதுகாக்க முடியும் என்றாா்.

இந்நிகழ்வில், தஞ்சை, நாகை, திருவாரூா், புதுக்கோட்டை, காரைக்கால், மயிலாடுதுறை மாவட்டங்களைச் சோ்ந்த குழந்தைகள் நல மருத்துவா்கள் கலந்து கொண்டனா். இதற்கான ஏற்பாடுகளை இந்திய குழந்தைகள் மருத்துவக்குழுமத் தலைவா் டி.ராஜா, செயலாளா் பகடப்பள்ளி சீனிவாசன், பொருளாளா் பி.பரத்குமாா், மருத்துவா் மஞ்சுகேஸ்வரி உள்ளிட்டோா் செய்திருந்தனா். ஒருங்கிணைப்புக்குழு செயலாளா் எஸ்.பாலாஜி நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.