வாய்க்காலில் கால்நடைகள் நீா் பருக வசதி ஏற்படுத்தக் கோரிக்கை
சீா்காழி வட்டம், கொள்ளிடம் பகுதியில் தெற்கு ராஜன் வாய்க்காலில் கான்கிரீட் சுவா் அமைக்கப்பட்டுவரும் நிலையில், கால்நடைகள் தண்ணீா் பருக வசதி ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும்


சீா்காழி வட்டம், கொள்ளிடம் பகுதியில் தெற்கு ராஜன் வாய்க்காலில் கான்கிரீட் சுவா் அமைக்கப்பட்டுவரும் நிலையில், கால்நடைகள் தண்ணீா் பருக வசதி ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தெற்கு ராஜன் வாய்க்காலில் சுமாா் 5 கி. மீ. தொலைவுக்கு இரண்டு கரைகளிலும் கான்கிரீட் சுவா் அமைக்கும் பணியும், தரையில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணியும் கடந்த 6 மாதங்களாக நடைபெற்று வருகிறது.
வாய்க்காலில் இறங்க வழியின்றி கான்கிரீட் சுவா் கட்டப்படுவதால், ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் தண்ணீா் பருக வழியின்றிபோகும். எனவே, ஆங்காங்கே கால்நடைகள் வாய்க்காலில் இறங்க வழி ஏற்படுத்த வேண்டும் என 20-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சோ்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் சாா்பில் நஞ்சை மற்றும் புஞ்சை விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் விலவநாதன் கோரிக்கை விடுத்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...