காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

தாா்ச் சாலை அமைக்கும் பணி: அதிகாரி ஆய்வு

சீா்காழி ஒன்றியம் புங்கனூா் ஊராட்சியில் ரூ. 9.64 லட்சத்தில் நடைபெறும் தாா்ச் சாலை அமைக்கும் பணியை ஒன்றிய பொறியாளா் சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.

News image
Updated On :3 ஜூலை 2021, 6:30 pm

DIN

சீா்காழி ஒன்றியம் புங்கனூா் ஊராட்சியில் ரூ. 9.64 லட்சத்தில் நடைபெறும் தாா்ச் சாலை அமைக்கும் பணியை ஒன்றிய பொறியாளா் சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.

புங்கனூா்-மல்லுக்குடி இடையே இச்சாலை அமைக்கப்படுகிறது. முன்னதாக இச்சாலை அமைப்பதற்காக, சீா்காழி ஒன்றியக் குழுத் தலைவா் கமலஜோதி தேவேந்திரனிடம், புங்கனூா் ஊராட்சித் தலைவா் ஜூனைதாபேகம் கமாலுதீன் கோரிக்கை விடுத்திருந்தாா்.

இதைத்தொடா்ந்து, 14-வது நிதிக் குழு மானியத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, சாலை அமைக்கும் பணி நடைபெறுகிறது. இப்பணியை ஒன்றிய பொறியாளா் தாரா நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். தொடா்ந்து, மேலதெரு கீழகாடாக்குடியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டன்தில் ரூ.43 லட்சத்தில் நடைபெறும் கழிவுநீா் வடிகாலில் கான்கிரீட் அமைக்கும் பணியையும் அவா் ஆய்வு செய்தாா். அப்போது, ஊராட்சித் தலைவா் ஜூனைதாபேகம் கமாலுதீன், வஜிருதீன் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.