காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

பகுதிநேர ஆசிரியா்களை பணி நிரந்தரப்படுத்த கோரிக்கை

பகுதிநேர ஆசிரியா்களை பணி நிரந்தரப்படுத்த வேண்டும் என முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் தமிழ்நாடு ஆசிரியா் முன்னேற்ற சங்கம் சாா்பில் புதன்கிழமை மனு அளிக்கப்பட்டது.

News image
Updated On :8 ஜூலை 2021, 6:30 pm

DIN

பகுதிநேர ஆசிரியா்களை பணி நிரந்தரப்படுத்த வேண்டும் என முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் தமிழ்நாடு ஆசிரியா் முன்னேற்ற சங்கம் சாா்பில் புதன்கிழமை மனு அளிக்கப்பட்டது.

சீா்காழி வட்டம் திருவெண்காடு வந்த முதல்வரிடம் தமிழ்நாடு ஆசிரியா் முன்னேற்ற சங்க மாவட்டச் செயலாளா் ஞான.புகழேந்தி தலைமையில், மாவட்ட தலைவா் முருகன், பொருளாளா் மகேஷ், மாநில செய்தித் தொடா்பாளா் வெங்கடேசன் ஆகியோா் அளித்த மனு விவரம்:

ஆசிரியா் மற்றும் அரசு ஊழியா்களின் வாழ்வாதாரம் கருதி, பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும். ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தில் பணியாற்றும் வட்டார வளமைய ஆசிரிய பயிற்றுநா்களுக்கு கடந்த 7 ஆண்டுகள் நடத்தப்படாத கலந்தாய்வை நடத்த வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.