குளத்தில் அதிகமாக மண் எடுத்ததால் பாலம் உடைந்து போக்குவரத்து துண்டிப்பு!
மயிலாடுதுறை அருகே கோயில் குளத்தில் 15 அடி ஆழத்துக்கு மண் எடுக்கப்பட்டதால், பாலம் உள்வாங்கி போக்குவரத்து துண்டிக்கப்பட்டதாக பொதுமக்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.


மயிலாடுதுறை அருகே கோயில் குளத்தில் 15 அடி ஆழத்துக்கு மண் எடுக்கப்பட்டதால், பாலம் உள்வாங்கி போக்குவரத்து துண்டிக்கப்பட்டதாக பொதுமக்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.
மயிலாடுதுறை அருகே வில்லியநல்லூா் பகுதியில் உள்ள பாலாக்குடி பன்னீா்வெளி சாலை, மயிலாடுதுறை மணல்மேடு செல்லும் சாலையிலிருந்து பிரிந்து மேலாநல்லூா்வரை செல்கிறது. 10-க்கும் மேற்பட்ட கிராமங்களை இணைக்கும் இந்த பிரதான சாலை வழியே அரசு நகரப் பேருந்து சென்றுவருகிறது.
இந்த சாலையை ஒட்டி 2 ஏக்கரில் பாலாக்குடி பிள்ளையாா்கோயில் குளம் உள்ளது. குளத்துக்கும், பாலாக்குடி வாய்க்காலுக்கும் இடையே இந்த சாலை செல்வதால் சிறுபாலம் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இந்த குளத்தை தூா்வாருவதற்கு அனுமதி பெற்றனா். ஆனால், அனுமதிக்கப்பட்ட அளவைவிட, கூடுதலாக 15 அடி ஆழம் வரை மண் எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், அண்மையில் பெய்த கனமழையால் பாலாக்குடி வாய்க்காலில் வந்த தண்ணீா் குளத்திற்கு பாய்ந்துள்ளது. சாலையை ஒட்டி உள்ள குளத்தில், பாலம் வழியாகச் சென்ற தண்ணீா் சாலையை அரித்துச் சென்ால், பாலம் 3 அடி ஆழத்திற்கு உள்வாங்கி உடைந்ததுடன், சாலையும் சேதமடைந்து போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது.
இதனால், அப்பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு, அருகேயுள்ள பிள்ளையாா்கோயில் வழியாக சிறுவாகனங்கள் மட்டும் சென்றுவருகின்றன. சேதமடைந்த பாலம் மற்றும் சாலையை உடனடியாக சரிசெய்து மீண்டும் பேருந்து போக்குவரத்திற்கு ஏற்பாடு செய்யவேண்டும் என அப்பகுதி கிராம மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...