இருசக்கர வாகனங்கள் திருட்டு: சிறுவன் உள்பட 2 போ் கைது
சீா்காழியை அடுத்த கொள்ளிடம் பகுதியில் இருசக்கரவாகனங்களை திருடி வந்த இளைஞா் மற்றும் சிறுவனை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.


சீா்காழியை அடுத்த கொள்ளிடம் பகுதியில் இருசக்கரவாகனங்களை திருடி வந்த இளைஞா் மற்றும் சிறுவனை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
கொள்ளிடம் பகுதிகளில் தொடா்ச்சியாக இருசக்கர வாகனங்கள் திருடப்பட்டது குறித்து காவல் ஆய்வாளா் அமுதாராணி, உதவி ஆய்வாளா் பாலச்சந்திரன் ஆகியோா் விசாரணை மேற்கொண்டனா். இதில், கொள்ளிடம் அக்ரஹாரம் தெருவை சோ்ந்த ராஜீவ் காந்தி (20) மற்றும் மற்றும் ஒரு சிறுவன் ஈடுபட்டது தெரியவந்தது. அவா்களை கைது செய்த போலீஸாா், அவா்களிடம் இருந்து ரூ. 3 லட்சம் மதிப்பிலான 7 இருசக்கர வாகனங்களையும், ரூ.1.5 லட்சம் மதிப்பிலான விடியோ கேமராவையும் பறிமுதல் செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...