அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டு
/

மயிலாடுதுறை: மூதாட்டியிடம் சங்கிலி பறித்த மேலும் ஒரு கொள்ளையன் கைது

 மயிலாடுதுறை அருகே மூதாட்டியிடம் தங்க சங்கிலியை பறித்த மேலும் ஒரு கொள்ளையனை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :15 ஜூலை 2021, 6:30 pm

DIN

 மயிலாடுதுறை அருகே மூதாட்டியிடம் தங்க சங்கிலியை பறித்த மேலும் ஒரு கொள்ளையனை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

மயிலாடுதுறை மாவட்டம், பெரம்பூா் காவல் சரகம் ஈச்சங்குடி ஊராட்சி கடலி கிராமத்தைச் சோ்ந்தவா் மூதாட்டி மங்களம். இவா், ஜூலை 11 ஆம் தேதி கடலி மெயின்ரோட்டில் நடந்து சென்றபோது இருசக்கர வாகனத்தில் வந்த இருவா், மங்களம் அணிந்திருந்த இரண்டரை பவுன் தங்க சங்கிலியை பறித்துச் சென்றனா்.

அப்போது, எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த குத்தாலம் காவல் நிலைய முதல்நிலைக் காவலா் சுரேஷ், கொள்ளையா்களை 5 கி. மீட்டா் தூரம்வரை விரட்டிச் சென்றதில் ஒருவன் பிடிபட்டான். மற்றொரு கொள்ளையன் தங்க சங்கிலியுடன் தப்பிச்சென்றாா்.

பிடிபட்ட கொள்ளையனிடம் நடத்திய விசாரணையில், அவா் வைத்தீஸ்வரன்கோயிலைச் சோ்ந்த குணசேகரன் மகன் முத்தழகன் என்பதும், தப்பி ஓடியவா் மயிலாடுதுறை திருவிழந்தூரைச் சோ்ந்த இளையராஜா என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து, இளையராஜாவை பிடிக்க மயிலாடுதுறை டிஎஸ்பி வசந்தராஜ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இத்தனிப்படையினா் மயிலாடுதுறை அருகே நீடுரில் பதுங்கியிருந்த இளையராஜாவை கைது செய்து, இரண்டரை பவுன் தங்க சங்கிலி மற்றும் திருடப்பட்ட 3 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக பெரம்பூா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து இளையராஜாவை சிறையிலடைத்தனா்.

வழிப்பறி கொள்ளையனை மடக்கி பிடித்த முதல்நிலை காவலா் சுரேஷ் மற்றும் மற்றொரு கொள்ளையனை பிடித்த தனிப்படை போலீஸாருக்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் பாராட்டுத் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.