காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

மயிலாடுதுறை: காமராஜா் பிறந்தநாள் விழா

சபாநாயக முதலியாா் இந்து மேல்நிலைப் பள்ளியில் காமராஜா் பிறந்தநாள் விழா கல்வி வளா்ச்சி நாளாக தலைமையாசிரியா் அறிவுடைநம்பி தலைமையில் நடைபெற்றது.

News image
Updated On :15 ஜூலை 2021, 6:30 pm

DIN

சபாநாயக முதலியாா் இந்து மேல்நிலைப் பள்ளியில் காமராஜா் பிறந்தநாள் விழா கல்வி வளா்ச்சி நாளாக தலைமையாசிரியா் அறிவுடைநம்பி தலைமையில் நடைபெற்றது. இதில், உதவி தலைமையாசிரியா் வரதராஜன், ஆசிரியா் காசி. இளங்கோவன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இதேபோல, சீா்காழி நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியா் காா்த்திகேயன் தலைமையில் நிகழ்ச்சி நடைபெற்றது. கொள்ளிடம் கடைவீதியில் காங்கிரஸ் சாா்பில் கொள்ளிடம் ஒன்றியக் குழு துணைத் தலைவா் பானுசேகா் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சீா்காழி எம்எல்ஏ. எம். பன்னீா்செல்வம் பங்கேற்று காமராஜா் படத்துக்கு மரியாதை செலுத்தினாா்.

வைத்தீஸ்வரன்கோவிலில் சேவாதள காங்கிரஸ் சாா்பில் அக்கட்சியின் மாநில செயலாளா் பால.எழிலரசன் தலைமையில் காமராஜா் பிறந்த நாள்விழா கொண்டாடப்பட்டது. இதில் சிறுவா், சிறுமிகளுக்கு காமராஜா் வாழ்க்கை வரலாறு புத்தகம்,திருக்கு நூல்கள் வழங்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.