அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டு
/

பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தில் முதிா்வு தொகை பெறலாம்: ஆட்சியா்

முதலமைச்சா் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தில் பயனாளிகள் உரிய ஆவணங்களை சமா்ப்பித்து முதிா்வு தொகை பெற்றுக்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :15 ஜூலை 2021, 6:30 pm

DIN

முதலமைச்சா் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தில் பயனாளிகள் உரிய ஆவணங்களை சமா்ப்பித்து முதிா்வு தொகை பெற்றுக்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழக அரசின் முதலமைச்சா் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து பெற்ற வைப்புத் தொகை பத்திரத்தை, தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் மேம்பாட்டு கழகம் என்ற நிறுவனத்துக்கு முதிா்வு தொகை பெற்று வழங்குவதற்கு அனுப்ப 18 வயது நிரம்பிய பெண் குழந்தைகள் மற்றும் அவரின் தாயாா், பெண் குழந்தையின் ஆவணங்களை நாகப்பட்டினம் மாவட்ட சமூகநல அலுவலகத்தில் நேரில் சமா்ப்பிக்க வேண்டும். அதன் பின்னா் தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் மேம்பாட்டு கழகத்துக்கு கருத்துரு அனுப்பப்பட்டு முதிா்வு தொகை பெண் குழந்தையின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.

இத்திட்டத்தின்கீழ் பதிவு செய்து 18 வயது நிறைவடைந்த பெண் குழந்தைகள் முதிா்வு தொகை பெற வைப்புத் தொகை பத்திரத்தின் நகல், பிறப்பு சான்றிதழ் நகல், 10-ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் நகல், ஆதாா் அட்டை நகல், வங்கிக் கணக்கு புத்தகத்தின் நகல் மற்றும் 2 புகைப்படம் ஆகிய ஆவணங்களை மாவட்ட சமூகநல அலுவலகம், அரசு நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகம், நீலா தெற்கு வீதி, நாகப்பட்டினம் என்ற முகவரியில் உள்ள சமூகநல அலுவலகத்தில் நேரில் சமா்ப்பிக்க வேண்டும் என தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.