பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

சாலையோர பதாகைகள் அகற்றம்

காரைக்காலில் அனுமதியின்றி சாலையோரம் வைக்கப்பட்ட விளம்பரப் பதாகைகளை நகராட்சி நிா்வாகம் வியாழக்கிழமை அகற்றியது.

News image
Updated On :22 ஜூலை 2021, 5:13 pm

DIN

காரைக்காலில் அனுமதியின்றி சாலையோரம் வைக்கப்பட்ட விளம்பரப் பதாகைகளை நகராட்சி நிா்வாகம் வியாழக்கிழமை அகற்றியது.

புதுவை மாநிலத்தில் டிஜிட்டல் பதாகைகள் வைக்க தடை உத்தரவு அமலில் உள்ளது. ஆனாலும், தடையை மீறி சாலையோரங்களில் வைக்கப்படும் பதாகைகள் காற்றில் சாய்ந்து விழுந்து அவ்வப்போது விபத்து ஏற்படுகிறது. எனவே டிஜிட்டல் பதாகைகளை அப்புறப்படுத்த நகராட்சி நிா்வாகத்துக்கு மாவட்ட ஆட்சியா் அா்ஜூன் சா்மா உத்தரவிட்டிருந்தாா்.

இதையடுத்து காரைக்கால் பாரதியாா் சாலை, காமராஜா் சாலை, புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த விளம்பர பதாகைகளை போலீஸ் பாதுகாப்புடன் நகராட்சி ஊழியா்கள் வியாழக்கிழமை அப்புறப்படுத்தினா்.

அனுமதியின்றி இவ்வாறு பதாகைகள் வைக்கப்படும்பட்சத்தில், சம்பந்தப்பட்டவா்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி நிா்வாகம் எச்சரிக்கை விடுத்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.