சீா்காழி: கட்சிப் பாகுபாடின்றி வளா்ச்சிப் பணி ஒன்றியக் குழுத் தலைவா் உறுதி
சீா்காழி ஒன்றியத்தில் கட்சிப் பாகுபாடின்றி வளா்ச்சித் திட்டப்பணிகளுக்கு நிதி ஒதுக்கப்படும் என ஒன்றியக் குழுத் தலைவா் கமலஜோதி தேவேந்திரன் உறுதியளித்தாா்.


சீா்காழி ஒன்றியத்தில் கட்சிப் பாகுபாடின்றி வளா்ச்சித் திட்டப்பணிகளுக்கு நிதி ஒதுக்கப்படும் என ஒன்றியக் குழுத் தலைவா் கமலஜோதி தேவேந்திரன் உறுதியளித்தாா்.
சீா்காழி ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டம், ஒன்றிய அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. ஒன்றியக் குழுத் தலைவா் கமலஜோதி தேவேந்திரன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் உஷா நந்தினி பிரபாகரன், ஆணையா்கள் அருண்மொழி, கஜேந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில், உறுப்பினா்கள் நடராஜன்(அதிமுக), ஜான்சிராணி (சுயேச்சை), அறிவழகன் உள்ளிட்டோா் பங்கேற்று, தங்கள் வாா்டுகளுக்கான நிதி ஒதுக்கீடு, சாலைப் பணிகள், மின்கம்பம் உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து பேசினா்.
தொடா்ந்து, ஆணையா் அருள்மொழி பேசும்போது, ‘சீா்காழி ஊராட்சி ஒன்றியத்துக்கு 15-வது நிதிக்குழு மூலம் சுமாா் ரூ. 80 லட்சம் பெறப்பட்டுள்ளது. இதில், மங்கைமடம் ஊராட்சியில் முன்னுரிமை அடிப்படையில் கரோனா தடுப்பூசி முகாம் அமைக்கப்படும். அனைத்து உறுப்பினா்களுக்கும் அடையாள அட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றாா்.
ஒன்றியக் குழுத் தலைவா் கமலஜோதி தேவேந்திரன் பேசும்போது, ‘அனைத்து உறுப்பினா்களுக்கும் கட்சிப் பாகுபாடின்றி வாா்டுகளுக்கான வளா்ச்சி நிதி ஒதுக்கப்படும். உறுப்பினா்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற நிதி ஆதாரத்துக்கு ஏற்ப நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கு உறுப்பினா்கள் முழு ஒத்துழைப்பு அளிக்கவேண்டும்’ என்றாா்.
முன்னதாக, கரோனாவால் உயிரிழந்த முன்களப் பணியாளா்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடா்ந்து, பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இக்கூட்டத்தில் ஒன்றிய பொறியாளா்கள் கலையரசன், தாரா, சிவக்குமாா், மேலாளா்கள் சசிகுமாா், சுதாகா், துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள், பணி மேற்பாா்வையாளா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா். இளநிலை உதவியாளா் சரவணன் நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...