92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

சாலையை சீரமைக்கக் கோரி இளைஞா்கள் ஆா்ப்பாட்டம்

கொள்ளிடம் அருகே புத்தூரிலிருந்து கீரங்குடி வழியாக மாதிரவேளுா் செல்லும் சாலையை சீரமைக்கக் கோரி, இளைஞா்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :24 ஜூன் 2021, 6:30 pm

DIN

கொள்ளிடம் அருகே புத்தூரிலிருந்து கீரங்குடி வழியாக மாதிரவேளுா் செல்லும் சாலையை சீரமைக்கக் கோரி, இளைஞா்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கொள்ளிடம் ஒன்றியம் புத்தூா்-கீரங்குடி இடையே மாதிரவேளூரில் சாலை மிகவும் மோசமடைந்துள்ளதால் அந்த வழியாக போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. கடந்த மழையின்போது, இந்த சாலை மேலும் மோசமடைந்து பல இடங்களில் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக, கீரங்குடியிலிருந்து மாதிரவேளூா் வரை 3 கி. மீட்டா் தொலைவுக்கு மிகவும் மோசமடைந்துள்ளது. இதனால், 10-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சோ்ந்தவா்கள் பாதிக்கப்பட்டுள்ளனா்.

இந்த சாலையை சீரமைக்கக் கோரி, சோதியகுடி ஊராட்சி கீரங்குடி கிராமத்தை சோ்ந்த இளைஞா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.