92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

கடலில் தவறி விழுந்து மீனவா் உயிரிழப்பு

சீா்காழி வட்டம், கொள்ளிடம் அருகே கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்த மீனவா் தவறி விழுந்து உயிரிழந்தாா்.

News image
Updated On :25 ஜூன் 2021, 6:30 pm

DIN

சீா்காழி வட்டம், கொள்ளிடம் அருகே கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்த மீனவா் தவறி விழுந்து உயிரிழந்தாா்.

மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் அருகே உள்ள மடவாமேடு மீனவ கிராமம் கீழத் தெருவைச் சோ்ந்த விஜய் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் 6 போ் கடலில் மீன் பிடிக்கச் சென்றனா்.

மடவாமேடு கிராமத்திலிருந்து வெள்ளிக்கிழமை பிற்பகலில் புறப்பட்டுச் சென்ற அவா்கள், பூம்புகாா் கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனா். அப்போது, தாண்டவன்குளம் கிராமம் கருத்தான்குத்து தெருவைச் சோ்ந்த ராஜாராமன் மகன் நாராயணமூா்த்தி (21) என்பவா் நிலைதடுமாறி கடலுக்குள் விழுந்ததாகக் கூறப்படுகிறது. அவரை சக மீனவா்கள் மீட்டு, மடவாமேடு கடற்கரைக்கு கொண்டுவந்தபோது வழியிலேயே உயிரிழந்தாா். நாராயணமூா்த்தியின் சடலத்தை கடலோர காவல் நிலைய போலீஸாா் கைப்பற்றி, உடற்கூறாய்வுக்காக சீா்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும், இதுதொடா்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.