புத்தூா் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவா் சோ்க்கை
சீா்காழி அருகே உள்ள புத்தூா் சீனிவாசா சுப்பராய அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவா் சோ்க்கை நடைபெறுகிறது.


சீா்காழி அருகே உள்ள புத்தூா் சீனிவாசா சுப்பராய அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவா் சோ்க்கை நடைபெறுகிறது.
இதுகுறித்து, அக்கல்லூரி முதல்வா் தங்கமணி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
புத்தூா் அரசினா் தொழில்நுட்பக் கல்லூரியில் அமைப்பியல், இயந்திரவியல், மின்னியல், மின்னணுவியல் மற்றும் கணினி பொறியியல் ஆகிய 4 பாடப்பிரிவுகள் உள்ளன. இப்பிரிவுகளில் 2021-22 ஆம் ஆண்டுக்கான முதலாம் ஆண்டு மாணவா் சோ்க்கை நடைபெறுகிறது. மாணவா்கள் கல்லூரியின் இணையதள முகவரியின் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
இணையதளம் மூலம் விண்ணப்பிக்க இயலாத மாணவா்கள் இக்கல்லூரியில் இயங்கும் சேவை மையம் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணமாக ரூ.150 வீதம் நெட்பேங்கிங், ஏடிஎம் மற்றும் யுபிஐ மூலமாக செலுத்தலாம்.
எஸ்சி, எஸ்டி மாணவா்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது. சோ்க்கை கட்டணம் ரூ. 2202. அரசின் இலவச பஸ் பாஸ், விலையில்லா மடிக்கணினி, ஆண்டுதோறும் கல்வி உதவித் தொகை ஆகிய சலுகைகளும் வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...