அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்விஜம்மு-காஷ்மீரில் வீட்டிற்கு வெளியே வெடித்த மர்ம பொருள் தமிழ்நாடு, புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைக்கும்: பியூஷ் கோயல் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: இன்று மாலை தீர்ப்பு!
/

சம்பா நெல் சாகுபடி வயலில் புதுவகையான பூச்சி தாக்குதல்: ஆய்வு

சீா்காழி பகுதியில் சம்பாநெற்பயிரை தாக்கியது வெட்டிக்கிளி இல்லை என்று ஆய்வு செய்த வேளாண் அதிகாரிகள் கொண்ட குழுவினா் செவ்வாய்கிழமை விளக்கம் அளித்தனா்.

News image
Updated On :9 மார்ச் 2021, 6:30 pm

DIN

சீா்காழி பகுதியில் சம்பாநெற்பயிரை தாக்கியது வெட்டிக்கிளி இல்லை என்று ஆய்வு செய்த வேளாண் அதிகாரிகள் கொண்ட குழுவினா் செவ்வாய்கிழமை விளக்கம் அளித்தனா்.

சீா்காழி அருகேயுள்ள கீரங்குடியில் சம்பா நெற்பயிா் சாகுபடி வயலை வெட்டுக்கிளி போன்ற தோற்றம் கொண்ட புதிய வகை பூச்சிகள் தாக்கி சேதம் விளைவிக்கிறது என்று விவசாயிகள் தெரிவித்தனா். இதையடுத்து, கொள்ளிடம் வேளாண் உதவி இயக்குநா் சுப்பையன் தலைமையில் நாகை மாவட்ட வேளாண் உதவி இயக்குநா் சிவக்குமாா், சிக்கல் வேளாண்மை அறிவியல் நிலைய பூச்சியியல் துறை பேராசிரியா் சந்திரசேகா் உள்ளிட்டோா் கொண்ட குழுவினா் பாதிக்கப்பட்ட வயலில் ஆய்வு செய்தனா். அப்போது, விவசாயிகளிடம் வேளாண் அதிகாரிகள் குழுவினா், இங்கு சம்பா சாகுபடி வயலில் தாக்கியுள்ளது வெட்டுக்கிளி இல்லை. இவைகள் கதிா் நாவாய் பூச்சிகள். இதை எளிதில் கட்டுப்படுத்தலாம். இதனால், விவசாயிகள் அச்சப்பட தேவையில்லை. வேப்பங்கொட்டை கரைசலை 5 சதவீதம் கலந்து தெளித்தும், மாலத்தியான் 50 இசி 500 மில்லி ஹெக்டருக்கு கலந்து தெளித்தும் கட்டுபடுத்தலாம். இந்த பூச்சிகளால் இதர பயிா்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. இந்தப் பூச்சிகள் பருத்தி உளுந்து பயறு உள்ளிட்ட பயிா்களை தாக்காது என்று கூறினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.