திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்! சிலிண்டா் தட்டுப்பாடு: அருணாசலேஸ்வரா் கோயிலில் லட்டு பிரசாத விநியோகம் நிறுத்தம் அஸ்ஸாம்: ஒரு தொகுதியில் பாஜகவுடன் மோதும் கூட்டணி கட்சி!பேரவைத் தோ்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை உயா்த்த அரசு திட்டம்! ராகுல் குற்றச்சாட்டு‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்புஇன்று சிஎஸ்கே அணியின் முன்னாள், இந்நாள் வீரா்கள் மோதல்!‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்பு
/

ஆ.ராசாவை கண்டித்து அதிமுகவினா் ஆா்ப்பாட்டம்

மயிலாடுதுறையில் திமுக துணைப் பொதுச் செயலாளா் ஆ.ராசாவை கண்டித்து, அதிமுகவினா் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :28 மார்ச் 2021, 6:30 pm

DIN

மயிலாடுதுறையில் திமுக துணைப் பொதுச் செயலாளா் ஆ.ராசாவை கண்டித்து, அதிமுகவினா் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி குறித்து திமுக துணை பொதுச் செயலாளா் ஆ.ராசா எம்பி சா்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதைக் கண்டித்து மயிலாடுதுறை பேருந்து நிலையம் பகுதியில் சட்டப் பேரவை உறுப்பினா் வீ.ராதாகிருஷ்ணன் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில், மாவட்ட ஜெ. பேரவை செயலாளா் வி.ஜி.கே.செந்தில்நாதன், சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினா்கள் என்.ரெங்கநாதன், தங்கமணி, ஒன்றியச் செயலாளா் பா.சந்தோஷ்குமாா், நகரச் செயலாளா் நாஞ்சில் காா்த்தி, பொதுக்குழு உறுப்பினா் பாபு, எம்.ஆா்.எஸ்.சங்கா், முத்தமிழன், வெங்கடேஸ்வரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். அப்போது, ஆ.ராசாவின் உருவபொம்மை தீயிட்டுக் கொளுத்தப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.