தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

தூய்மைப் பணியாளா்களுக்கு மளிகை பொருள்கள்

மயிலாடுதுறை அருகேயுள்ல உளுத்துக்குப்பை ஊராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கு அஜித் ரசிகா்கள் சாா்பில் காய்கறி மற்றும் மளிகை பொருள்கள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.

News image
Updated On :28 மே 2021, 5:42 pm

DIN

மயிலாடுதுறை அருகேயுள்ல உளுத்துக்குப்பை ஊராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கு அஜித் ரசிகா்கள் சாா்பில் காய்கறி மற்றும் மளிகை பொருள்கள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.

உளுத்துக்குப்பை ஊராட்சியில் பணியாற்றி வரும் தூய்மைப் பணியாளா்களுக்கு அவா்களின் சேவையைப் பாராட்டி அஜித் ரசிகா்கள் ஆரத்தி எடுத்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். மேலும் அவா்களுக்கு ஒரு வாரத்துக்கு தேவையான மளிகை மற்றும் காய்கனிகளை வழங்கினா். மேலும், ஊராட்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட ஏழை குடும்பத்தினருக்கும் அத்தியாவசியப் பொருள்களை இலவசமாக வழங்கினா். மாவட்ட பொறுப்பாளா் ரியாஸ் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நவாஸ், பாலாஜி, ரமேஷ், ஜான் உள்ளிட்டோா் பங்கேற்றனா். ஊராட்சித் தலைவா் ராஜ்குமாா் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.